இந்தியன் என்ற அடையாளம் நிலைக்குமா

நதிநீர் பங்கீடு
நீதிமன்றத் தலையீடு
நடுவண் மன்றம் அமைத்திட
நால்வகைக் கருத்து முரண்பாடு
நடுவில் இருக்கும் அரசுக்கோ
நாளைய தேர்தலுக்கான ஒருப்பாடு

இதிகாச இராமனுக்கும்
மூராவழி பாபருக்கும்
இடம் வேண்டி இருதரப்பில்
இன்றுவரை கூப்பாடு
இந்திய இறையாண்மைக்கு
இது விளைத்தது கூறுபாடு

இருகரம் நீட்டிய இந்திய அன்னையின்
சிரத்தில் புற்றாய் ஆசாத் காஷ்மீர்
மாநிலத்திடை உறவு மல்லுக்கட்டு
முடக்குவாதமாய் இடபுரம் மாவோயிஸ்டு
இனிவரும் நாளில் இவை முற்றிப்போனால்
இந்தியன் என்ற உன் அடையாளம் நிலைக்குமா.....?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Nov-16, 1:20 pm)
பார்வை : 72

மேலே