என் இதய விம்மல்

ன் இதய விம்மல்...!
உன் வழித்தடங்கள் தடையம் தேடி
என் வாழ்க்கைத்தடம் தகித்து நகர்ந்தது

தன்வழித் தேடும் நதியாய் உன் குணம்
கரையோரம் என்னை சபித்து சுகிர்த்தது

வழிநெடுக விழிகள் உலர்ந்து
இதய விம்மலை விதைத்து பகிர்ந்தது

நாசி பிறந்த வெந்தணல் மூச்சில்
நகைமலர்களும் காய்ந்து உதிர்ந்தது

உயிர் உருகும் ஓசையை காற்று
ஒலிநாடாவாய் பதித்து அதிர்ந்தது

சக்கர வாழ்வு சாயும் முன்னே என்
சன்னதி தேடி என்றேனும் ஏகுவாய்

ஆர்ப்பரித்து அடங்கிய என் ஆன்மாவின் கேவலை
தூரெடுத்துக் காண அலந்தையில் ஏங்குவாய்

அன்றோ.... அரூபமாகி ஜோதியில் கலந்து நான்
சமாதியாகி எங்கோ உறங்கிக் கிடப்பேன்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (4-Nov-16, 1:17 pm)
பார்வை : 78

மேலே