என் யன்னல் ஓர பயணம்
திறந்த யன்னல் அருகில்
நான் பயணிக்கிறேன்
என் பழைய நினைவுகளை சுமந்தவனாக
என் பொழுதுகள்
இந்த பேரூந்து பயணத்தின்
எரிபொருளாக
எரிந்துகொண்டே இருக்கிறது
என் நண்பர்களின்
சிரிப்பொலிகளும் சிறு கதைகளும்
என் பயணத்தின் அலங்காரமாக
சாரதியின் ஆர்முடுகளில்
என் கற்பனைகளும்
சாட்டை பட்ட குதிரையாய்
தெறித்து ஓடுகின்றன
என் காலை பொழுதும்
மாலை பொழுதும்
காட்சியளிப்பதே இந்த
யன்னல் அருகில்தான்
உழைக்க ஓடும்
கூட்டத்தில்
நான் மட்டும் என்ன
விதிவிலக்கா ....
நானும் ஓடுகிறேன்
பணத்திற்காக
ஏனோ இந்த யன்னல் அருகில்
பழைய ஞாபகங்களுடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
