மீ ண்டும் வருவாயா

அடுத்த மனிதனுக்கு
ஆறுதல் சொல்கையில்
எளிதாய் இருந்ததடி
பிரிவதும்,சேர்வதும்
இயற்கையென்று !
தனக்கு வரும்போதுதான்
தெரிகிறது தனிமையின்
தகிப்பு என்னவென்று !
நீயொன்றும் நெடுநாள்
நட்பில்லை !
உதிரத்தில் ஒட்டிய
உறவுமில்லை !
சில காலமாய்தான்
நம் சினேகம் !
ஆனால் வெறும் பார்வையிலேயே
பரவசம் தரும்
விந்தையை
உன்னிலிருந்துதான்
பெற்றேன்.....!
வெள்ளைக் காகிதங்களெல்லாம்
விளைநிலங்களாயின !
உன் அசைவுகளையெல்லாம்
கவிதைகளாக்கியதில் !
நீ கொஞ்சம் விலகினாலும்
உடைந்த கண்ணாடியாய்
என் மனம் ! அதிலும் ஆயிரமாயிரமாய் உன்
அழகு முகம் !

நீயோ நிரந்தரமாய்
பிரியலாமென்கிறாய்
உன் பிரிவில் நான்
உயிர் பிரியும் அவஸ்தையை
உணர்கிறேன் !
வெற்றிடத்தை காற்று
நிரப்புமாம் ! இல்லை
என்னில் உன்னிடம்
நிரந்தர சூன்யமாயிருக்கும் !
மீண்டும் நீ (மீண்டு)
வரும் வரை !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (2-Nov-16, 12:41 pm)
பார்வை : 86

மேலே