பாஸில் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாஸில்
இடம்:  காத்தானகுடி
பிறந்த தேதி :  04-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Oct-2014
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் இலங்கை, colombo இல் ஒரு மருத்துவராக கடமை புரிகிறேன்.

என் படைப்புகள்
பாஸில் செய்திகள்
பாஸில் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2016 11:15 pm

விடிந்து விட்டது..!
ஏன் இன்னும் விழித்திட மறுக்கிறாய்?

ஓ.. உன் வாழ்வில் தொலைத்து விட்ட
சந்தோசங்களை கனவிலாவது காண்பதற்கா..??

மேலும்

அருமை 08-Nov-2016 7:56 pm
புதுமைப் பெண்கள் வாழ்வில் இனியாவது பாதைகள் முள்ளின்றி அமைதல் வேண்டும் 08-Nov-2016 7:19 am
பாஸில் - nuskymim அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Nov-2016 1:48 pm

ஒரே ஒரு நகைச்சுவையை
திரும்பி திரும்பி சொல்ல
சிரிப்பை குறைத்து கொள்ளும்
மனிதன்
என்றோ நடந்த துன்பத்தை
நினைத்து நினைத்து
தினமும்
கவலை கொள்வதேனோ.........?

மேலும்

மிகவும் நன்று! 08-Nov-2016 12:42 am
வாழ்க்கையின் யதார்த்தமே அதுதான்..! கால்பந்தில் கோல் காப்பவர் தடுத்ததையோ காத்ததையோ யாரும் கணக்கிடுவதில்லை. மாறாக அவன் தவறவிட்டதையே கோல் ஆக கணக்கிடுவர். தொடர்ந்தும் எழுது நண்பா..! 07-Nov-2016 11:03 pm
அதுவே வாழ்க்கையின் சலனங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2016 10:45 pm
பாஸில் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2016 7:13 am

விண்மீன்கள் கண்சிமிட்ட
விடியலுக்காய் காத்திருக்க
கட கட ஒலியெழுப்பி
கனதியாய் ஆள் நிரப்பி
கரியோடு புகை பரப்பி

காரிருளைக் கிழித்தூடே
காடு கழனி பின் ஓட - பல
காத தூரம் தாண்டி வர
கண் மூடா என்னோடு- என்
கனத்த மனம் கூட வர

நாட்டு நடப்பை
நாசூக்காய் நக்கலடிக்கும்
நலன்விரும்பிகளோடு
வாயாலே வடை சுட்டு
வாழ்ந்தே பழகிப்போன
வெட்டிப் பயல்கள் ஒரு பக்கம்

வாய்க்குழியின் அமுக்கத்தை
வளி மண்டல
அமுக்கத்தில் பேணி
குட்டி நாக்கு
வெட்டைக்கு வர
குறட்டை விட்டுறங்கும்
ஏ ஆர் ரகுமான் கள்
இன்னொரு பக்கம்

கோமாவில் கிடப்போனையும்
கோரசாக எழுப்பி விடும்
கோப்பி ! கோப்பி ! சத்தங்கள்

ஜன்னலூடு தலை

மேலும்

வாழ்க்கையின் அனுபவங்கள் கடந்து சென்ற காலத்தால் தொடருகின்ற வாழ்க்கைக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2016 8:49 am
பாஸில் - பாஸில் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2016 2:57 pm

புகையின்றி...!
---------------

விண்மீன்கள் கண்சிமிட்ட
விடியலுக்காய் காத்திருக்க
கட கட ஒலியெழுப்பி
கனதியாய் ஆள் நிரப்பி
கரியோடு புகை பரப்பி

காரிருளைக் கிழித்தூடே
காடு கழனி பின் ஓட - பல
காத தூரம் தாண்டி வர
கண் மூடா என்னோடு- என்
கனத்த மனம் கூட வர

நாட்டு நடப்பை 
நாசூக்காய் நக்கலடிக்கும்
நலன்விரும்பிகளோடு
வாயாலே வடை சுட்டு 
வாழ்ந்தே பழகிப்போன
வெட்டிப் பயல்கள் ஒரு பக்கம்

வாய்க்குழியின் அமுக்கத்தை 
வளி மண்டல 
அமுக்கத்தில் பேணி
குட்டி நாக்கு 
வெட்டைக்கு வர
குறட்டை விட்டுறங்கும்
ஏ ஆர் ரகுமான் கள் 
இன்னொரு பக்கம்

கோமாவில் கிடப்போனையும்
கோரசாக எழுப்பி விடும்
கோப்பி ! கோப்பி சத்தங்கள்

ஜன்னலூடு தலை விட்டு
காற்றையும் காட்டையும் இருட்டையும் கருப்பையும் 
இரசிக்கும்
தனிமை விரும்பிகள்

குழந்தையை மடியிலும் 
மனைவியை தோளிலும்
தூங்க வைத்து - தான் தூங்காதிருக்கும்
பாரம்தாங்கி அப்பாக்கள்

ரெண்டு சீட்டு புக் பண்ணி
ஒன்றில் உட்கார்ந்து
மௌன மொழி பேசி
காபன்டையொக்சைட்டை
சுவாசிக்கும்
காதல் ஜோடிகள்

இத்தனைக்கும் மத்தியில் இற்றுப்போன 
இறந்த காலம்
சகீனா கிழவியின்
செக்கு மாடாய் சுற்றி வர

ஏக்கத்தீயில்-கருகிப்போன 
ஏமாந்த என்னுள்ளம்
கரியின்றி புகையுமின்றி
பெருமூச்சை வெளிச்செறிய

புகை வண்டியில் செல்லும்
புகை விடா வண்டியாய் 
ஒரே ஒரு "நான்" !

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே