மீண்டும் வைதேகி

உன்னிடத்தில் என்னை கொடுத்து
எனக்குள் உன்னை கோர்த்து- நாம்
விளையாடும் இந்த
பண்ட மாற்று போன்ற
ஒரு காதல் விளையாடெதற்கு?

விதியென்று ஒன்றிருக்கு
வழிநடத்த வாழ்விருக்கு...
அதற்கிடையில் இப்படி ஓர்
ஆசை எதற்கு!!

நடத்தி வரும் ஆசான் அங்கே
நன்றாய் ஆட்டுவித்தான்
நம்மை இங்கே
நடுநிலையில் மனிதம் இன்னும்
இருக்கிறதா???
எங்கே??? எங்கே???

பிரிந்துத்தான் போகும்
என்றால்
பிரமாத கூட்டணி
நமக்குள் ஏனோ??

மண்ணும் உன்னை திண்று விட்டது
மணதில் இன்னும் வாழ்கிறாய்
அன்பா..
உன் நினைவை சுமந்து
இவள் இன்னமும் நடக்கிறாள்
கேள்வி குறியாய்........

எழுதியவர் : செல்வி கிருஷ்ணன் (14-Aug-14, 3:52 pm)
பார்வை : 132

மேலே