இந்தப் பிரியங்களை என்ன செய்ய?

கொஞ்சம் வானம்...
கொஞ்சம் பூக்கள்...
எனது அறைக்கு உள்ளேயும்...
தனிமையில் மிதக்கும்.

விலகும் என் நிழல்
வழியனுப்ப இயலாத
தனிமையைத் தவிர்க்க...
தாழ்த்தி மூடும் தன் கண்களை.

எப்பொழுதாவது...
எனக்குள் பெய்யும் மழை...
என்னை வெப்பப் படுத்திவிட...
தவறாய் இருக்கிறது எனது பருவங்கள்.

நான் அறிய நேர்ந்தவை...
எனக்கான இரகசியமாகிவிட...
என் முகம் எனக்குப் பிடிக்காததாகிவிட்டது...
எனது கண்ணாடியில்.

இடிந்த...
எனது தெருவோரத்து ஒற்றைச் சுவர்
சுமக்கும் நினைவுகளாய்...

கசக்கும் என் நினைவுகள்....
என் வாழ்வின் வழியெங்கும்.

பகிர்தலின்...
அழகறியாது...
நான் மட்டும்
இன்னமும் உன்னையும் சுமந்து....

வலி தொடரும்
இந் நாட்களின் இறுதியில்...

இன்னமும்
மிச்சமிருக்கும்

இந்தப் பிரியங்களை என்ன செய்ய?

எழுதியவர் : rameshalam (25-Sep-13, 5:09 pm)
பார்வை : 122

மேலே