குப்பை போடாதீர்கள்.!
பூங்காவிற்குள்.,
அக்கறையற்ற மனிதன்
யாரோ போட்ட குப்பை..,
ஊதிவிட்ட காற்றின் வழியே
திசைமாறிப் பறந்தது..!
அங்கே இங்கேயென
சுற்றிப் பறந்த குப்பை
வீதிவழியே சென்ற
சாக்கடைக்குள் விழுந்தது.!
அது புரண்டது..நனைந்தது.
குமட்டெலெடுக்கும் வகையில்
முங்கி அமிழ்ந்தது..
முழுதாய் நாற்றமெடுத்தது..!
வழியில் சென்றோரெல்லாம்
ஆங்கே குவிந்தனர்..!
எங்கிருந்து வந்த குப்பை
ஆராய்ச்சி நடந்தது..!
எவர் போட்டிருப்பர்..?
எப்படிப் போட்டிருப்பர்..?
எதற்காகப் போட்டிருப்பர்.?
ஆராய்ச்சி தொடர்ந்தது..!
அளவற்ற வியாக்கியானங்கள்
அர்த்தமற்ற சாடல்கள்..
அறிவற்ற வாதங்கள்..
அலைக்கழிக்கும் எண்ணங்கள்..!
நீண்டது மணித்துளிகள்..
குப்பை மட்டும் நகர்ந்தபாடில்லை..
வேடிக்கை பார்க்க வந்தது
ஆங்கே குழந்தை ஒன்று.!
தேடிய கையில்
கிடைத்தது குச்சியொன்று..,
குப்பையை வாரி
அதற்கான தொட்டியில் போட்டது..!
சாக்கடையும் சுத்தமாச்சு..
நாத்தமும் போயாச்சு..!
ஆராய்ச்சி செய்த மனங்கள்
இப்போது யோசிக்கலாச்சு..!
இருளைப் பற்றி
விவாதிப்பதை விட
ஒரு தீபத்தை..
ஏற்றிவைப்பது நல்லது..!