உஷார்!

சுயநலக் கூட்டங்கள்
சுற்றிச் சுற்றி வளையுமே..
தயக்கமின்றியே பொய்
தைரியமாய் சொல்லுமே.
உனக்காக உழைப்பதாக
உண்மைகளை மறைக்குமே.
தனக்காக உன்னையுந்தான்
தர்மம் விலகச் செய்யுமே.
செய்யாததை செய்ததாக
சீண்டி யுன்னை கெடுக்குமே.
பொய்யர்களை புரிந்துமே
புறக்கனித்தால் நல்லதே..