தோழர்களே எச்சரிக்கிறேன்-கே.எஸ்.கலை
அன்னதானம் போடுகையில்
ஆத்திகனாகவும்
அண்டா கழுவவேண்டி வருகையில்
நாத்திகனாகவும்
இருப்பாரோடு இருந்தால் சிரமம் !
=======
அருமையாய் கண் தெரிபவனோடு
அச்சமின்றி நடக்கலாம்
அறவே கண்தெரியாதவனோடு
அனுசரித்து நடக்கலாம்
அரைகுறையாய் கண் தெரிபவனோடு
அய்யோ அய்யோ முடியாது !

