காதலே!!! காதலே !!!
உயிரோடு பிறந்தவளா ! உணர்வோடு வளர்ந்தவளா !
என்னோடு கலந்தவளா !
இவள் தானா ; இவள் தானா ; இவள்தானா !
என் மனதில் உள்ளவனா ! நான் விரும்பும் நல்லவனா
எனதருமைக் காதலனா !
இவன் தானா ; இவன் தானா ; இவன் தானா !
பனித்துளியும் மேகத்துடன் ஊர்வலம்
கண்ணிரெண்டில் காதலர்கள் போர்க்களம்
உன் மூச்சுக் காற்றில் நான் உயிர் வாழ்கிறேன் ;
உன் நாணத்தை மறைக்கும் வரம் கேட்கிறேன் ;
என் நாடித்துடிப்பை நீண்ட நாள் கேட்கிறேன் ;
அந்திப் பொழுதில் வானத்தை ரசிக்கிறேன் ;
இரவுகள் தோறும் என் விழியில் உன்
கனவு மலர்கள் பூக்கும்;
மலர்களின் மெத்தையில் மஞ்சை
உன் மடியில் நான் உறங்குகிறேன் ;
வானமே வானமே ஒரு வானவில் தேவதை ;
பார்த்ததும் வியக்கிறேன் ; பால்நிலா ஓவியம் நீ
உன் தோளில் ஒரு நிமிடம் சாய்கிறேன்
நான் மறுபடி குழந்தையாய் ஆகிறேன் ;
காதல் கண் இமைகளால் பேசுவேன் ;
என் சேலைத் தலைப்பால் உன்னை மூடுவேன் ;
நீ கற்பனை சிலையா ? செய்தது சிற்பியின் கலையா
கடலென காவியம் அலையென ஓடிவரும்
நீ ஒரு கற்சிலையா ???
காதலே காதலே நீ கவிதையா என் காவியமா
உன் வாய்மொழி கேட்கையில் வசந்தம் வீசுதே !!!