வா. நேரு- கருத்துகள்

வாழ்த்துக்கள் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு .

"புத்தகம் என்பதே
புத்துயிர்தான் ! ". உண்மை , வாழ்த்துக்கள்.

"உரைப்பதும் உள்ளதைத்தான் ....
ஊரும்நாடும் நலம்பெறத்தான் ....." தொடர்ந்து சொல்லுங்கள் . வாழ்த்துக்கள் .

"நட்பு என்பது கற்பு
உள்ளார்ந்த உள்ளங்களின் தொகுப்பு " அருமை . வாழ்த்துக்கள் .

இளம் வயதில் கிராமத்தில் எருமை மாட்டின் மேலமர்ந்து , சவாரி செய்ததையும், நண்பனிடம் பேசுவது போல அதனிடம் பேசிக்கொண்டிருந்ததையும் நினைவுபடுத்தி விட்டீர்கள், தோழியர் -வாழ்த்துக்கள்.

தோழர் வணக்கம். தொடர்கதை போல வெளிவரும் நாவலா ? கதை ஓட்டம் மிக இயல்பாகவும் நன்றாகவும் இருக்கிறது. தொடருகிறேன் நானும் .....வாசிப்பினை... வாழ்த்துக்கள்

நன்றி , தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

நேரில் பார்த்த, பாதித்த அனுபவத்தை கவிதையாக எழுதும்போது படிப்பவர்களையும் பாதிக்கும் . அப்படி ஒரு கவிதையை வடித்த சுஜய் ரகு அவர்களுக்கும், அதனை அப்படியே சிறுகதையாக வரைந்திட்ட தோழர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். மனதில் பதிந்ததை அப்படியே வரைந்திடும் ஓவியர் போல சிறுகதையை வரைந்திருக்கின்றீர்கள் அபி, நல்ல முயற்சி, நல்ல சிறுகதை . நன்று , நன்று. பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

அய்யா, வணக்கம். கருத்துரைக்கு மிக்க நன்றி . ஒரு நல்ல உணவை சாப்பிட்டவுடன், மறுபடியும் நமக்கு பிடித்தமானவர்களோடு சேர்ந்து சென்று அந்த உணவை மீண்டும் சாப்பிடுவதுபோல நல்ல புத்தகத்தைப் படித்தால் அதனை மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லும் வழக்கம் எனக்கு பல ஆண்டுகளாக உண்டு. இப்போது படித்த புத்தகத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எழுத்து.காம் அளிக்கிறது. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கமூட்டல் இன்னும் பல புத்தகங்கள் பதிவுக்குத் தூண்டும். நன்றி அய்யா.

நன்றி வாசிப்பிற்கும், பாராட்டிற்கும். அருமையான தளம் எழுத்து. நிறைய எழுதுங்கள், நிறைய வாசியுங்கள். படைப்பாளியாய் மிளிருங்கள். நட்புடன் வா.நேரு.

ஒன்றும் ஆகவில்லை தோழரே, மிக நன்றாக இருக்கின்றேன். எனக்கென்ன கவலை.இரண்டு நண்பர்கள் , மிக நெருக்கமாக உயிருக்குயிராகப் பழகியவர்கள். இருவரும் ஒருவராக உயர்ந்தவர்கள். பிணக்கு திடீரென்று. சரி செய்ய நடுவராக நின்று பார்த்தேன். முடியவில்லை. அதின் விளைவாக இந்தக் கவிதை. நமது அனுபவமும், சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் அமையும் அனுபவமும்தானே படைப்பு. மற்றவர்களின் அனுபவமும் எனது படைப்புக்களில் உண்டு. நன்றி தோழரே...

நன்று.அப்படியே வைத்துக்கொள்ளலாம். நன்றி தோழரே

நன்றி , எப்போதும்போல தோளில் கைபோட்டு நண்பரைப் பாராட்டும் நட்பாய் வந்து விழும் வாழ்த்து வார்த்தைகள். "பண்புடையார் பட்டுண்டு உலகம் " , நன்றி தோழரே, நன்றி.

கட்டாயம் படியுங்கள். நல்ல மொழி ஆளுமையொடு அருமையாக கதையை நகர்த்திக்கொண்டு சென்றுள்ளார் இந்த நாவல் ஆசிரியர். ஒரு நல்ல கதை சொல்லி, இன்னொரு நல்ல கதை சொல்லியை வாசிப்பது - உங்களுக்குத்தான் அருமையான அனுபவமாக இருக்கும். நன்றி தோழரே..

நன்றி அய்யா மெய்யன் நடராஜ் அவர்களே...


வா. நேரு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே