மாடு போற்றுதும்
![](https://eluthu.com/images/loading.gif)
மனிதனுக்காய் பால் கொடுத்து
மனிதனுக்காய் தோள்(ல்) கொடுத்து
மனிதனுக்காய் தனைக் கொடுத்து
மாண்டு போவது மாடு...!
இரத்தமெல்லாம் பிழிஞ்சி விட்டு
ஏறேற்றி உழுது விட்டு
எடையேற்றிப் படுத்தி விட்டு
ஏமாற்றி வாழ்வதே மனிதன்...!
மாடு போற்றும் ஒருநாள்
உழைப்பை போற்றும் ஒருநாள்
மணிகள் கட்டி வண்ணமிட்டு
போற்றுவோம் இந்த ஐந்தறிவை...
நம்சோற்றுக்கு பின்னும் இருக்கும்
நம்சக்திக்கு பின்னும் இருக்கும்
நம்கிராமத்து வாசம் கொடுக்கும்
நம்நண்பனை இன்று வாழ்த்துவோம்...!
தெரியா இந்த தலைமுறைக்கு
புரிய வைப்போம் அதனருமைகளை
தெரிந்த நாமும் மறந்திட்டால்
அறிவைப் பெருக்கி ஆவதென்ன?