புத்தகம் படி தம்பி

புத்தகம் படி தம்பி !

புத்தகம் என்றதும்
புழுங்கி விடாதே தம்பி
புத்தகம் என்றதும்
புலம்பி நில்லாதே தம்பி !
அறிஞர்கள் தேடுவதும்
புத்தகம்தான் !
அறிவியலார் நாடுவதும்
புத்தகம்தான் !

புத்தகம் என்பதே
புத்துயிர்தான் !
புத்தகம் என்பதே
புணரமைக்கத்தான் !

படிப்பதும் அதன்படி
நடப்பதும் நல்லது தம்பி !
பிடித்து படி, நல்ல புத்தகம்
தேடி பிடித்து படி தம்பி

காந்திக்கு ஒரு புத்தகம்
அரிச்சந்திர புராணம் தம்பி
அறிஞர் அண்ணாவிற்கும்
அழகாய் பிடிக்கும் தம்பி
அவர்கள் படி, அறிவோம் படி
அன்பைப் படி அதிகம் படி!
புத்தகம் படி, நல்ல புத்தகம்
மெத்த படி, நல்ல படி தம்பி
---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Jan-16, 8:33 pm)
பார்வை : 236

மேலே