வெற்றி மேல நேசம்

வெற்றி மேல நேசம் !

காற்றோடு நேசம் வைச்சா
கடல லையில் போகலாம் !
உடலோடு நேசம் வைச்சா
உடலுழைப்பை அளிக்கலாம் !

கடும்வெயில் நேசம் வைச்சா
பாலைவனத்திலும் போகலாம் !
சோலைவனத்தில் நேசம் வைச்சா
சுகமாத்தான் இருக்கலாம் !

விண்மீன்கள் நேசம் வைச்சா
விண்ணுலகு போகலாம் !
தண்ணீரில் நேசம் வைச்சா
தாவி…தாவி குளிக்கலாம் !

காசுமேல நேசம் வைச்சா
கருத்தாக இருக்கலாம் !
ஆசைமேல நேசம் வைச்சா
அதிகாரமா இருக்கலாம் !

வெற்றிமேல நேசம் வைச்சா
வாழ்க்கையிலே வெல்லலாம் !
நன்றிமேல நேசம் வைச்சா
நாலுபேருக்கு உதவலாம் !

---- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (20-Jan-16, 8:35 pm)
பார்வை : 361

மேலே