சிலையாய் ஆவதற்கு
சிலையாய் ஆவதற்கு !
வா….. வா… என்றே
வெறுங்கற்கள்
அழைப்பதில்லை
சிலையாய் ஆவதற்கு !
சிறப்பாய் தெரியும்
கற்கள்தான்
சிலையாய் மாறிடும்!
வீணாய் வெறுங்கல்லாய்
வீழ்ந்து கிடப்பாயோ ?
சிலை வடிவாய்
சிறப்பாய் இருப்பாயோ ?
சிலையாய் ஆனால்
சிறப்புதான் தோழா !
கலையாய் ஆனால்
கவிதைதான் தோழா !
சிலையானாலும்…
கவிதையானாலும்
நன்றுதான் தோழா !
------ கே. அசோகன்.