கசலில் விழுந்தேன்
கசல் முதல் கசல் வரை
இரவும் வரும் பகலும் வரும் ...நிலவோடு நீ மட்டுமே..
இணைந்தே இருந்தும் ...பிரிவோடு நான் மட்டுமே..
உன் கறுப்பு வெள்ளை சிறையில்.. எனை சிறை பிடித்தாய் விழிகளாலே..
அங்குமிங்கும் என் விழிகளைத் தேடி.. மிதித்தாய் மொழிகளாலே..
கொடிய ஆட்சி நடத்தி துரத்துகிறாய் ..உன் பார்வையாலே..
குடியாட்சி பெற்ற சித்தனிடம் சொடுக்கிறாய்...சொல்கோர்வையாலே.
என் தோட்டத்து மல்லிகள் பூத்ததடி ..உன் காலடி பட்டதிலே..
இருந்தும் விட்டத்து பல்லிகள் சத்தமடி ... உன் காலடி படாமலே...
உன். நினைவாய் வைத்தேன்...'ஆப்பிள் தோட்டத்து ராணி' பெயர் சூட்டியே..
என் கனவாய் வந்து கொய்தே... இந்த ராஜாவை உருட்டி மிரட்டியே...
உன் பெயர் போதையில் மது என நினைத்து அருந்தினேன்... என்காதல்
அளவிற்கு அதிகமான அமிர்தம் ...என்பதை மறந்து வருந்தினேன்.
அலையாக மேலும் கீழும் தாவுகிறேன் உன்னோடு....எனைக் கண்டதிலே..
நுரையாக .நீயும்....பிடிக்கமுடியாமல்
தவிக்கிறேன் உனைக் காணாமலே...
எனக்கு நீ....ஒளி காட்டும் அகல் விளக்காக ஆனோமே..
உனக்கு நான்.... விட்டில் பூச்சியாய் ஆனேனே...
கோழிக்கு விடிந்ததும் கூவிடத் தெரியுமே..
பெடையே...உனக்கு மட்டும் விடிந்தும் காத்திருக்கத் தெரியாதோ?
கோயிலில் பூஜிக்கும் சிலைதான்...
நீ கற்கவில்லையோ?
வாயிலில் என் இதயம்தான்..
உனக்கு கற்சிலையோ?
ஜனிக்க சொல்கிறேன் ..என் காதலை தொடர்ந்து வாழவே....
மரணிக்கச் சொல்கிறாய் ..
புதைக்குழிக்குள் வீழவே...
உன்வார்த்தைப் பூக்களை சேமிக்கின்றேன் ...புரியலையோ?
என் வரிப்பூக்களை சேமித்துக் கோர்க்கிறேன்...தெரியலையோ?