தன்னம்பிக்கை

துன்பங்கள் நம்மை
புழுவாய் துடிக்க வைத்தாலும்
காலக்கூட்டிலே முதிர்ந்து
வண்ணத்துப்பூச்சியாய்
சிறகடிப்போம்


வருத்தங்களை விரட்டி
வாழ்வை சோலையாக்கி
வருவோருக்கு வாழ்வளிப்போம்


கவலையை களையெடுத்து
கனவை நினைவாக்கி
காலத்தின் பேரேட்டில்
வரலாற்றை -நாம்
பதிப்போம்.

எழுதியவர் : புன்னகை பொன்மலர் (22-Jan-16, 5:11 pm)
சேர்த்தது : ஆ ரா வீரசேகர்
Tanglish : thannambikkai
பார்வை : 514

மேலே