ஆ ரா வீரசேகர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆ ரா வீரசேகர் |
இடம் | : விழுப்புரம் |
பிறந்த தேதி | : 21-Jul-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 2 |
அன்பின் வழியது உயிர்நிலை
துடிக்கும் பொழுது
நினைக்காது
நின்ற பின்னும்
துடிக்காது
வாசல் வழி
சென்றாலும்
வா என்று
அழைக்காது
ஒரு உருண்டை
சோற்றுக்கு
செல்லாத கதைகள்
சொல்லி
வாய்க்கரிசி இட்டு
விட்டு
பாசம் என்று
பாசாங்கு செய்து
இருக்கும் பொழுது
ஈயாது
செத்தபின்னே சுவற்றுக்கு
படைக்கும்
பயனற்ற சொந்தங்கள்.
-புன்னகை பொன்மலர்
எத்தனையோ இருக்கு - அட
அத்தனையும் எதுக்கு?
மொத்த பித்தும் - எனக்கு,
ஒம்மேல தான் இருக்கு!
கத்த வித்த மறக்கும் - அட
ஓம்பக்கமே எனயிழுக்கும்!
புரியலையே பொழப்பும் - இங்க,
ஓனெனப்பால் - எனக்கும்!
காட்டேரியா திரியிறேன் -அட
காடுமேடு ஒலவுரேன்!
கட்டுமஸ்து மாமோய் - ஒன்ன,
காணாமதான் பொலம்புறேன்!
வச்சகண்ணு வாங்காம - அட
சொச்ச ஆட்டம் ஆடனும்!
மிச்ச விட்டுபோயிட்டா - என்னா
ஆவேன் நானும்?
மாட்டக்க வேணாம்! - அட
மல்லுகட்டும் வேணாம்!
மனச பறிச்ச மச்சான் - நீ
மொகத்த காட்டு போதும்!
பெத்தவதான் பேரேன்கேட்டு - அட
கோயில்கொளந் திரியிரா!
செத்தவளா திரியவிட்டு - எங்க
போன ஏந்-திமிரே?
பொ
துன்பங்கள் நம்மை
புழுவாய் துடிக்க வைத்தாலும்
காலக்கூட்டிலே முதிர்ந்து
வண்ணத்துப்பூச்சியாய்
சிறகடிப்போம்
வருத்தங்களை விரட்டி
வாழ்வை சோலையாக்கி
வருவோருக்கு வாழ்வளிப்போம்
கவலையை களையெடுத்து
கனவை நினைவாக்கி
காலத்தின் பேரேட்டில்
வரலாற்றை -நாம்
பதிப்போம்.