மனிதாபிமானம்

மறைந்ததே மனிதாபிமானம்
மண்ணிலே இன்று !
மறந்ததே இச்சொல்லும்
மனதிலே இன்று !

இருப்போரின் இதயங்கள்
இறுகித்தான் போனதே !
சுழல்கின்ற பூமியும்
சுயநலமானதே !

உதவுகின்ற எண்ணமும்
உலகினில் குறையுதே !
உப்பிட்டோரை நினைப்பதும்
உள்ளத்தில் நீங்கியதே !

பேரிடர் நிகழ்ந்தால்தான்
ஓடிவரும் நிலையிங்கு !
பெருபான்மை நேரங்களில்
ஒதுங்கியே இருப்பதிங்கு !

இனத்திற்கு இடரென்றாலும்
வேடிக்கை பார்ப்பதேன் !
ஈரமில்லா இதயத்துடன்
வீதிஉலா வருவதேன் !

நடிகர்களாய் மாறுவதேன்
நல்லது செய்வதாய் !
வாயடைத்துப் போவதேன்
வாயில்லாத உயிரினமாய் !

அபிமானம் என்பதுமின்று
அந்நிய சொல்லானதே !
மனிதனே மனிதனின்று
மதிப்பதும் இல்லையே !

உரைப்பதும் உள்ளதைத்தான்
ஊறில்லை என்உள்ளத்திற்கு !
ஊரும்நாடும் நலம்பெறத்தான்
கூறுவதும் உண்மையைத்தான் !

உணர்ந்திடுவீர் உலகோரே
மாற்றிடுவீர் உள்ளத்தை !
உரைத்திடுவீர் உலகிற்கும்
மறவாதீர் செயலாற்ற !



பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Jan-16, 9:30 am)
பார்வை : 897

மேலே