pudhuyugan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : pudhuyugan |
இடம் | : இலண்டன் |
பிறந்த தேதி | : 05-Apr-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 2312 |
புள்ளி | : 334 |
இயங்கும் களங்கள்: சிறுகதை, புதினம்,கட்டுரை,மரபு மற்றும் புதுக்கவிதை. இலண்டன் உயர்கல்வி கல்லூரி ஒன்றின் துணை முதல்வர். 1994 ஆம் ஆண்டில் குமுதத்தில் வெளியான 'தாய்மை' என்ற குறுங்கதையின் மூலம் துவங்கியது என் பயணம். பின் கணையாழி, கல்கி, முல்லைச்சரம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள். எழுதிய நூல்கள்: 'சமுத்திர சங்கீதம்' - 2005 [மாயா யதார்த்த புதினம்]. 'Air Fire & Water' - 2010 [இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய ஆங்கில நூல்]. 'கதவு இல்லாத கருவூலம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. 'மடித்து வைத்த வானம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. ஆய்வுகள் / பேச்சுக்கள்: 2010 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும், கலிபோர்னியா தமிழ்க் கழக மாநாட்டிலும் ஆய்வுக்கட்டுரைகள். கம்பன் கழகத்தில் / விழாவில் உலக இலக்கிய நோக்கில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள். கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணல் :http://www.youtube.com/watch?v=aNv5ZGW681s Blogs: http://www.pudhuyugan.blogspot.com/ http://pirakuthuyugam.blogspot.com
‘அரசு அல்ல ..ஆள்குடி!அது வாழ்க வாழ்க’என்றார்.பிறகு அவரே,‘ஆள்குடிவாழ்குடிலால்குடிகுடிமக்கள்குடிசெய்வல்…’என்று அடுக்கிவிட்டுதடுமாறி எழுந்து நின்றார்.‘அந்தக் குடி வேறு;இந்தக் குடி வேறு’என்று சொல்ல மிகவும் விரும்பினேன்.அதற்குள், பாவம், இறந்து விட்டார்!
எம்மொழி போலும் இல்லாப் பொருளேசெம்மொழித் தமிழே சிம்மப் பெண்ணே
ஆயிரம் ஆண்டு ஆண்டுகள் வாழ்ந்தும்
தேயா நிலவாய் தினம்தினம் எழுவாய்
பிறப்புகள் ஒன்றென பாடியதுன் கவி
இறந்தும் வாழ உரைத்தது நாலடி
அன்பை கவியை ஆற்றலை காதலை
பண்பை உணர்வை பேசினம் உன்வழி
அட்டமா சித்தி அறிவித் தனையே
எட்டுச் சுரமும் அறிந்தாய் நீயே
வான்புகழ் வள்ளுவம் வந்ததுன் வழியே
பெண்ணை சாமியாய் படைத்ததும் நீயே
இந்துச் சமவெளி அங்கும் நீயே
எந்த மொழியும் உந்தன் பின்னே
அகமும் புறமும் அறிவித் தாயே
சகலம் வெல்லும் சூத்திரம் அதுவே
கொடுமை பரங்கி கொடுங்கோல் முடிக்க
விடுதலை வேட்கை வித்தாய் சத்தாய்
முளைத்தது இங்கே முதலில் யுத்தம்
விளைந்தது பி
நன்றாகத் தானே இருந்தார்
இப்போது என்ன ஆயிற்று?
'தமிழன்' என்பவர் பற்றி
பேச்சு வந்ததும்
தள்ளாட்டம் துள்ளாட்டம் போட
அவரே வந்தார்.
‘பராக்’ ‘பராக்’ என்று
முன்காலத்தில் வந்தவர்
பராக்கு பார்த்தபடி இப்போது வருகிறார்!
‘பக்கத்து வீட்டுக்காரர் நல்ல புத்தகம் படிக்கிறார்,
மேல் வீட்டுக்காரர் நல்ல வியாபாரம் பண்ணுகிறார்
இவர் மட்டும் ...அடக் கடவுளே..'
தலையில் அடித்தனர் பார்த்து நின்றவர்.
விழுந்த வேட்டியை
வளைத்துப் பிடித்து
போதை வழியச் சிரித்தார்
கல்யாணம் என்றால் போதை..
கருமாதி என்றால் போதை ..
மேடையில் குடி… வீட்டில் குடி…
வேலைக்கு வந்தால் குடி..
ஓட்டுக்குக் குடி
பேச்செல
**************************************************************
வருங்காலம் வங்கியெனில் வாடிக்கை யாளர்
தருங்காலம் தானே தழைக்கும் - அருங்காலம்
பூக்க முயற்சிமுதல் போட்டவர்க்கு வட்டியோடு
காக்கும் முனைப்புக் கணக்கு
**************************************************************
**************************************************************
வருங்காலம் வங்கியெனில் வாடிக்கை யாளர்
தருங்காலம் தானே தழைக்கும் - அருங்காலம்
பூக்க முயற்சிமுதல் போட்டவர்க்கு வட்டியோடு
காக்கும் முனைப்புக் கணக்கு
**************************************************************
பிள்ளைக் கறியாம் பழையகதை பேசாதே
கிள்ளை நிலைஇன்று கண்டபின் - கொள்ளை
கொடுங்கா முகரும் குழந்தை கதைமுடித்தல்
கல்லும் கரையும் கதை.
(நேரிசை ஆசிரியப்பா)
முங்கா முன்னன் முன்ஊழ் முந்தும்
செங்கோன் தரையின் செலவும் சீலமும்
ஒளிர்வு தில்லம் ஓங்க பஃறுளி
குளிரெடு பறவை குன்றென் றேகியே
இலக்கணம் அகத்தியம் இலங்கிட அறம்புறம்
துலக்கும் துணிவே தொல்நூல் காப்பியம்
விரிவின் வாழ்வதே விழிகொள் ளாகலும்
அரியதே உரியது அருந்தமிழ்ச் சங்கம்
எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்
கட்டும் பாடலும் கவிகளுங் கணக்கே
அவ்விடம் பறந்து ஐயோ வென்றே
செவ்வியப் புலமை செவிவிரித் தறிய
ஈதே கல்வி என்கொல்
யாதும் ஊரே யாவரும் கேளிரே!
‘கரிமேடு காமராசர்’ ஜான் மோசஸ் என்றும் வாழ்வார்!
கவிஞர் இரா. இரவி !
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும்!
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம்
கரிமேடு காமராசருக்கும் பொருந்தும்!
பணத்தை பெரிதாக மதித்து நடக்காமல்
குணத்தை பெரிதாக நினைத்து நடந்தவர்!
தொண்டர்களின்பால் அன்பு செலுத்திய அன்பாளர்
தொண்டு செய்வதை கடமையாகக் கொண்டவர்!
கவிஞர்களை மேடையேற்ரி அழகு பார்த்தவர்
கவியரங்கங்கள் நடத்தி நற்கருத்தை விதைத்தவர்!
பெரிய மனிதர்களை மதுரைக்கு அழைத்து வந்து
பெரும் கூட்டங்கள் நடத்திய செயல் வீரர்!
எளிமையின் சின்னமாக என்றும் வாழ்ந்தவர்
என்றும் காமராசரின் தொண்டராக வாழ்ந்தவர்
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்)
நூலாசிரியர்: கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
விமர்சனம்: கவிஞர் புதுயுகன்
__________________________________________________________________________________
*********** எளிமை சூழ் எழில்கள் ***********
__________________________________________
“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…”
பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.
மழையின் மனதிலே !
நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600 108. விலை : ரூ. 60.
*****
‘மழையின் மனதிலே’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர்.
இந்நூலில் சாகித்ய அகதெமி விருதுக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார
வணக்கம் நண்பர்களே
பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ்