N.valarmathi. - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : N.valarmathi. |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 3024 |
புள்ளி | : 977 |
விட்டெறிந்தாலும்
வீணை நாதமே பேசும் !
விட்டெறிந்தாலும்
புத்தகத்தில் கவிதை
பக்கங்களே திரும்பும் !
விட்டெறிந்தாலும்
மலர் மேனியை
மென்மையாகவே தொடும் !
நீ விட்டெறிந்தாலும்
என் மனம்
உன்னையே பாடும் !
விரல் தொட்டால்
வீணையில் ராகம்
மலர் தொட்டால்
தென்றலில் ராகம்
மௌனமே !
உன் விழி தொட்டால்
நெஞ்சினில் ராகம்
பார்ப்போர் இல்லா
பூக்களும்
படிப்போர் இல்லா
கவிதைதையும்
பூத்தும் யாத்தும்
பயனிலை !
ஆதவன் கதிர் விரித்தான் அந்தி மாலையில்
மாதவன் சிரித்தான் மாதவியும் சிரித்தாள்
போதுமா போகட்டுமா என்றான் ஆதவன்
போதாது நில் என்றாள் மாதவி !
வெள்ளை நிலாவை
முத்தமிட்டுச் சென்றன மேகங்கள்!
பணித்துளியோடு
உறவாடிக் கொண்டிருந்தன மலர்கள்!
தென்றலின்
தீண்டலில் சிலிர்த்துக்கொடிருந்தன மரங்கள்!
அன்பே.............
நீ என் பக்கத்தில் இருந்திருந்தால்
இயற்கையை வென்றிருப்போம் நாம் இருவரும்!!!!
நீ இல்லாத இந்த இரவு
நீண்டு கொண்டிருப்பது ஏனடி......... ?
நீரோடையின் சலசலப்பில்
நமது கலகலப்பான பேச்சுக்கள்
எத்துனை சுகம்!
சந்தோசமான குயிலோசையின் நடுவில்
சருகுகளின் சத்தத்தோடு துள்ளி விளையாடியதை
மறக்க முடியவில்லை நட்பே!
மயிலின் மகிழ்ந்த அகவளில்
கிடைத்த தோகையினால்
கிச்சி கிச்சி மூட்டிய தருணம் இன்பத்தின் எல்லை!
மலைமீது சிரித்தது அருவியோசை
மனதில் இழையோடியது நீ இல்லா தனிமை
தினம் தினம் மங்கலமான விடியல் என்றாலும்
என் நட்பே நீ இல்லாதது ஒரு சின்ன சோகம்தான்....!
சகியே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
சந்ததிகளோடு சந்தோசமாய் வாழ்ந்திருப்போம்!
மகனே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மகத்தான வாழ்கையை வாழ்ந்திருப்போம்!
மருமகளே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மரு மகளாக வானவில்லை ரசித்திருப்போம்!
நானும் கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
நலமுடன் நல்லதொரு வாழ்கையை வாழ்ந்திருப்போம்!
முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கிடக்கும் நெஞ்சத்தில்
நிறைந்து கிடப்பது சகிப்புத்தன்மை மட்டுமே.......!
மடிப்பு களையாத சட்டைக்குள்
என்னவளின் களையாத நினைவுகள்
அப்படியே ஆனந்தமாய் இருந்தன!
அது ஒரு நிலாக்காலமா ?
கனாக்காலமா? வசந்தகாலமா ?
அது ஒரு இனிமையான காலம்!
தலைநிறைய பூவோடு
தாவணியில் அவளைப் பார்த்தேன்
தடுக்கி விழுந்தது என் இதயம்!
சிநேகமாய் எனைப் பார்த்துச் சிரிப்பாள்
என்னுள் காதல் வாசம் வீசும்
ஆனாலும் சிறு புன்னகையை மட்டுமே காட்டுவேன்!
அவள் முகம் பார்க்கவே
அவளின் இல்லத்திற்கே செல்வேன்
அவளின் அண்ணன் என் நண்பன்!
அதனால்த்தானோ என்னவோ
என் காதலை அவளிடம்
சொல்லாமல் இருந்துவிட்டேன்!
அவள் எதேட்சையாக எனைத் தொட்டாள்
அவள் ஸ்பரிசம் பட்ட சட்டையை
அப்படியே இன்னும் எ
ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க....
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க.....
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க....
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க.....
ஜனமும் பூமியில் புதியது இல்லை....
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை...
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை...
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை....
பாசம் உலாவிய கண்களும் எங்கே....
பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே....
தேசம் அளாவிய கால்களும் எங்கே....
தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே.....
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக....
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க்க....
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக....
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க....