சின்ன சோகம்
நீரோடையின் சலசலப்பில்
நமது கலகலப்பான பேச்சுக்கள்
எத்துனை சுகம்!
சந்தோசமான குயிலோசையின் நடுவில்
சருகுகளின் சத்தத்தோடு துள்ளி விளையாடியதை
மறக்க முடியவில்லை நட்பே!
மயிலின் மகிழ்ந்த அகவளில்
கிடைத்த தோகையினால்
கிச்சி கிச்சி மூட்டிய தருணம் இன்பத்தின் எல்லை!
மலைமீது சிரித்தது அருவியோசை
மனதில் இழையோடியது நீ இல்லா தனிமை
தினம் தினம் மங்கலமான விடியல் என்றாலும்
என் நட்பே நீ இல்லாதது ஒரு சின்ன சோகம்தான்....!