சகிப்புத் தன்மை
சகியே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
சந்ததிகளோடு சந்தோசமாய் வாழ்ந்திருப்போம்!
மகனே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மகத்தான வாழ்கையை வாழ்ந்திருப்போம்!
மருமகளே நீ கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
மரு மகளாக வானவில்லை ரசித்திருப்போம்!
நானும் கொஞ்சம் சகித்துப் போயிருந்தால்
நலமுடன் நல்லதொரு வாழ்கையை வாழ்ந்திருப்போம்!
முதியோர் இல்லத்தில்
முடங்கிக் கிடக்கும் நெஞ்சத்தில்
நிறைந்து கிடப்பது சகிப்புத்தன்மை மட்டுமே.......!