நீ விட்டெறிந்தாலும்

விட்டெறிந்தாலும்
வீணை நாதமே பேசும் !
விட்டெறிந்தாலும்
புத்தகத்தில் கவிதை
பக்கங்களே திரும்பும் !
விட்டெறிந்தாலும்
மலர் மேனியை
மென்மையாகவே தொடும் !
நீ விட்டெறிந்தாலும்
என் மனம்
உன்னையே பாடும் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-17, 8:19 am)
பார்வை : 108

மேலே