கரிமேடு காமராசர்’ ஜான் மோசஸ் என்றும் வாழ்வார் கவிஞர் இரா இரவி

‘கரிமேடு காமராசர்’ ஜான் மோசஸ் என்றும் வாழ்வார்!
கவிஞர் இரா. இரவி !

இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும்!
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம்
கரிமேடு காமராசருக்கும் பொருந்தும்!
பணத்தை பெரிதாக மதித்து நடக்காமல்
குணத்தை பெரிதாக நினைத்து நடந்தவர்!
தொண்டர்களின்பால் அன்பு செலுத்திய அன்பாளர்
தொண்டு செய்வதை கடமையாகக் கொண்டவர்!
கவிஞர்களை மேடையேற்ரி அழகு பார்த்தவர்
கவியரங்கங்கள் நடத்தி நற்கருத்தை விதைத்தவர்!
பெரிய மனிதர்களை மதுரைக்கு அழைத்து வந்து
பெரும் கூட்டங்கள் நடத்திய செயல் வீரர்!
எளிமையின் சின்னமாக என்றும் வாழ்ந்தவர்
என்றும் காமராசரின் தொண்டராக வாழ்ந்தவர்!
நடிகர் திலகத்தின் மீது பற்று பாசம் மிக்கவர்
நடிகர் திலகத்தின் பிறந்த நாள், போற்றியவர்!
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உழைத்தவர்
கொஞ்சமும் தயக்கமின்றி உதவிகள் செய்தவர்!
ஏழைப் பங்காளனாகவே நாளும் வலம் வந்தவர்
இன்னல் தீர ஏழைகளுக்கு உதவி மகிழ்ந்தவர்!
பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் வாங்கி உதவியவர்
பலர் படித்து பட்டம் பெறக் காரணமாக இருந்தவர்!
கரிமேடு பகுதிக்கு நல்லபல காரியங்கள் ஆற்றியவர்
கரிமேடு காமராசர் என்றே எல்லோரும் அழைத்தனர்!
சாதிமத வெறியை ஒழிக்க ஓங்கி ஒலித்தவர்
சமதர்ம சமத்துவ சமுதாயம் அமைக்கப் பாடுபட்டவர்!
அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்
ஆர்ப்பாட்டங்களில் முதல் ஆளாக நின்று முழங்கியவர் 
சிம்மக்குரலால் சீர்திருத்தக் கருத்தை வலியுறுத்தியவர்
சிரமம் கருதாமல் பலருக்கும் உதவி மகிழ்ந்தவர்!உடலால்
உலகைவிட்டு மறைந்துவிட்ட போதிலும்
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் என்றும் வாழ்வார்!

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (1-Oct-21, 6:03 pm)
பார்வை : 35

மேலே