தோல்வி ஒன்றும் தொல்லை இல்லை தோழா

தோல்வி ஒன்றும் தொல்லை இல்லை தோழா;
தோல்வியில் இல்லை துக்கம் தோழா;
தோல்வியில் உண்டு துவக்கம் தோழா;
தோல்விக்குப்பின் தொடரும் துக்கமே பெரிது தோழா;
தோல்வியினால் வரும் வலியைவிட
தோல்விக்குப் பின் தொடரும் வலியே பெரிது தோழா.

தோல்வியின் தவிப்பில் விழுந்து கதறுவதை விட்டு விடு
தோல்வியும் வெற்றியே தோழா;
தோல்வியில் குழம்புவதை விடு தோழா.

தோல்வி ஒன்றும் தொல்லை இல்லை;
தோழமை இருக்க விழித்தெழு தோழா;
தோல்வியை தோண்டிவிட்டால், துயரம் விடுவதில்லை தோழா.
தோல்வி தொடர்ந்து வரும் போது துடி துடித்துவிடலாம்
அனால், தோற்றது போதும்;
தோல்வியை தோல்வியாக்கி விடு தோழா.

தோல்வியை தடுத்துவிட,
தோல்வியை எதிர்த்து நில்லு தோழா;
வெந்து நொந்திடுவதை நிருத்திவிடு;
தோல்வியையே
வேள்வி ஆக்கிவிடு தோழா.

பாதியில் வருவது தோல்வி;
பயணத்தைத்தொடர்ந்துவிடு
பாதையில் வரும் தடைகளை மாற்றி,
மீதி பயணத்தை வென்று விடு தோழா.

கண்ணீரினால் அழிக்கப்படுவதில்லை தோல்வி;
கண்ணீர் சிந்தி கதறுவதை விட்டுவிட்டு;
கண்ணும் கருத்துமாய் செயல்படு;
வாழ்வில் தோல்வி என்பதே இருக்காது தோழா.

வாழ்வில் துயரமே நிறம்பிவிட்டால்;
வாழ்க்கையில் நிம்மதி ஏது தோழா.
குறை கூறுவதை குறைத்து எடைபோடாதே;
குறைகளை திருத்த வாய்ப்பு என்று நினைத்துவிடு தோழா.
தோல்வியை தோளில் சுமந்தே கிடந்தால் விடுதலை ஏது தோழா.
விடுவித்துவிடு துயரை தோழா.

விடைகள் தேடாது,
தவிக்கும் தோல்வியில்
ஆதரவையும் ஆருதலைத் தேடுவதைவிட,
தோல்வியின் ஆதாரத்தைத்தேடு தோழா.

உண்மையை விட உன் மெய்யைப்பார்;
உண்மை என்ன வென்று தெரியும் தோழா.

தோல்வியின் தேடலில் உன் தோல்வியின் ரகசியம் புரியும் தோழா;
தோல்வி தொல்லையால் வருவதில்லை தோழா.
தொடரும் உன் தோல்வி பலவீனத்தாலும் பயத்தாலும் தான் வரும் தோழா.

திறமைபடைத்தவனும், தோற்பான் தோழா;
திடம் படைத்தவனும், தோற்பான் தோழா;
திறமையற்றவனும் தோற்பது உறுதி தோழா.

தோல்வி தொட்டு செல்லலாம்;
தோல்வி தொடரவேண்டாம் இனியும் தோழா.
தட்டிப் பறிக்கும் வெற்றியை தடுத்துவிடு தோழா.

தோல்விக்கு அஞ்சாதே தோழா;
துறத்திவிடப்பாரு, விரக்தியடையாதே,
விரத்தி உடையவன், தோல்வியின் தாக்கத்திலிருந்து விடுபடாது தவிப்பான் தோழா.

தோல்வியை விரட்டி அடிக்க முயன்றிடு தோழா;
விழுந்து தவிக்காதே,
எழுந்து ஓடு;
தோல்வி உன்னைத் துறத்தாது.

தோல்வி சிந்திக்கவைக்கும்;
தோல்வியையும் சந்தித்துவிடு தோழா;
சோகத்தில் இல்லை தோல்வி ;
சோர்ந்து கிடந்தால், தொத்தாமல் விடாது தோல்வி தோழா;
சொட்டும் கண்ணீரில் இல்லை தோல்வி தோழா;
தனிமை படுத்தினால் தனியாது தோல்வி;
தடுத்திடு தோழா.

நீதி என்ற ஒன்று இல்லை என்றால், அநீதியின் நிழலாய் தொடந்து வரும் தோல்வி தோழா.

பீதி என்ற ஒன்று எடுத்துவிட்டால்,
பேசாமலே வரும் தோல்வி தோழா .
பிழைகள் வந்து விட்டால்,
பிறந்திடும் தோல்வி தோழா;
பிடிவாதமாய் இந்தாலும் தோல்வி தான் தோழா;
பெயருக்கு நடந்து கொண்டால்;
பிடித்துக்கொள்ளும் தோல்வி தோழா;
எனக்கென்ன என்று இருந்துவிட்டாலும்;
இருக்கிவிடும் தோல்வி தோழா;
எழுச்சியும் என்னால் முடியும், என்றே முயன்றிடு;
தானாக மறைந்து விடும் தோல்வி தோழா.

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (1-Oct-21, 10:50 pm)
பார்வை : 220

மேலே