மாங்காய்ச் சொதி

மாங்காய்ச் சொதி.

மாட்டுக்கார மாணிக்கம்
மாட்டு வண்டியை
ஓட்டிக்கொண்டு,
வீடு நோக்கி
வருகையிலே!

மனதினில்,
மனைவி வந்து
ஒட்டிக் கொண்டாள்,
ஒட்டியவள் பேசக்
கேட்டான்!

" மச்சானே வா சீக்கிரம்,
மாங்காயில் சொதி
வைத்து,
உனக்கு பிடித் மீனில்
பொரியல் செய்து,
காத்திருக்கேன் நான்
இங்கு,
பசி என் வயிற்றை
தின்னுது,
மச்சானே வா சீக்கிரம்,
இல்லையேல்!
உன்பங்கையும்
திண்டிடுவேன்."

மாணிக்கம் சிரித்தக்
கொண்டான்,
மாடு தனை தட்டி
விட்டான்,
வண்டி சீக்கிரம்
செல்லட்டும் என்றே.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (2-Oct-21, 5:52 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 34

மேலே