சங்கம் ஒளி உறுமும் கான்

(நேரிசை ஆசிரியப்பா)

முங்கா முன்னன் முன்ஊழ் முந்தும்
செங்கோன் தரையின் செலவும் சீலமும்
ஒளிர்வு தில்லம் ஓங்க பஃறுளி
குளிரெடு பறவை குன்றென் றேகியே
இலக்கணம் அகத்தியம் இலங்கிட அறம்புறம்
துலக்கும் துணிவே தொல்நூல் காப்பியம்
விரிவின் வாழ்வதே விழிகொள் ளாகலும்
அரியதே உரியது அருந்தமிழ்ச் சங்கம்
எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்
கட்டும் பாடலும் கவிகளுங் கணக்கே
அவ்விடம் பறந்து ஐயோ வென்றே
செவ்வியப் புலமை செவிவிரித் தறிய
ஈதே கல்வி என்கொல்
யாதும் ஊரே யாவரும் கேளிரே!

எழுதியவர் : புதுயுகன் (31-Jan-23, 1:49 pm)
சேர்த்தது : pudhuyugan
பார்வை : 40

மேலே