உடையார்

(Tamil Nool / Book Vimarsanam)

உடையார்

உடையார் விமர்சனம். Tamil Books Review
பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ் சுத்தமாக அழிந்து இருக்கும்,
இராசராசன் இல்லை என்றால் தமிழ்க்கு 'தேவாரம்' இல்லை, 'திருவாசகம் ' இல்லை. பன்னிரு திருமுறைகளில் பாதி இல்லை, தில்லியில் தமிழ் வேதம் ஓதமாட்டோம் என்று அந்தனர்கள் தேவாரம் திருவாசகத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி செல் அரித்த தமிழ்யை அந்த மாகன் மீட்டு கொடுத்து தான் அத்தனையும்,
இது வெறும் வாசிப்பு இல்லை அந்த சிவபதகேசரியோடு வாழும் வாழ்க்கை, அவனோடு வாழ்ந்து அவனோடு இறப்பிற்கள், நான் அவனோடு வாழ்ந்து இருக்கிறேன் இறந்து இருக்கிறேன்.
என் அருகில் இருந்தவர் இறந்தது போலவும் அப்போது தான் எனக்கு அது தெரிந்தது போலவும் அழுதேன், கடைசி அத்யாயம் அந்த 20 நிமிடம் வரை அழுதேன், நான் முழுமையாக ஒரு சோழ தேசத்து மறவனாக மாறி இருந்தேன் என் அரசன் இறந்து போல் அழுதேன், என் அரசே இராசராச, எம் பெருமானே, ஈசனே, நீ மனிதனா இல்லை ஈசன், கடவுள் நீ எங்கே? இப்போது எங்கே இருக்கிறாய்? நான் இனி உன்னை எப்படி பார்ப்பேன்? இது தான் நான் புத்தகத்தை முடித்து விட்டு கேட்ட கேள்வி.

நான் நான் என்று அகந்தையில் திரியும் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு பிரமாண்ட கோவிலை கட்டிவிட்டு இதை நான் கட்டவில்லை எம் மக்கள் கட்டியது என்று ,

"நாம் கொடுத்தனவும்
நம் அக்கன் கொடுத்தனவும்
நம் பெண்டுகள் கொடுத்தனவும்
கொடுப்பார் கொடுத்தனவும் "

என கல்வெட்டில் எழுத சொன்னானே இவன் அரசனா, வெறும் மனிதனா இல்லை அவன் ஈசனின் குழந்தை.
கோவிலுக்கு நிவத்தம் கொடுத்த ஒருவர் பெயரும் விடாமல் கோவில் சுற்றி கல் வெட்டாக பதிய பட்டு உள்ளது.

இதில் வரும் கதை 95% உண்மை சிறிது கற்பனை, இதில் வரும் பெயர்கள் 98% உண்மை.

நான் என் பதினோராம் வயதில் பெரிய கோவில் பார்த்து இருக்கிறேன், ஆனால் அது வெறும் வேடிக்கை வெறும் கல் என்று விவரம் அறியாத வயதில் பார்த்து.
ஆனால் உடையார் படித்த பிறகு
நான் தஞ்சை போனால்.
அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று கொண்டு

" திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி.....

என்று அவன் மொய் கீர்த்தியை உரக்க கடத்துவேன்... அந்த சிவபதசேகரன் பெயர் பதித்த கல்லை தொட்டு தடவி அவன் நின்ன இடம் தொட்டு கண்ணில் ஒற்றுவேன்,
இங்கு தானே இராசராசன் நின்று இருப்பான், இங்கு நின்று தானே இந்த கல்லை தடவி இருப்பான், இங்கு அமர்ந்து தானே நிவத்தங்கள் கொடுத்து இருப்பான், இங்கு நின்று தானே ஈசனை வணங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக தொட்டு தடவி மொய் சிலித்து போவேன்.
அவன் பாதம் தொட்ட இடம் தொட்டு வாங்குவேன்.

அவர்கள் வாழ்ந்த கோட்டை இன்று இல்லை, அவர்களின் மாட மாளிகைகள் இல்லை எல்லாம் பினால் நடந்த படையெடுப்பில் அழிக்க பட்டது,
ஆனால் அந்த கோவில் அத்தனையும் கடந்து அவர் நினைத்தது போல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது..

"சந்திரர் சூரியன் இருக்கும் வரை இந்த கோவில் நிலைத்து நிற்கும் "

வாழ்க சோழ தேசம்
வளர்க தமிழ்
வாழ்க இராசராசன்
வளர்க சைவம்.

** உங்கள் வாழ் நாளில் நீங்கள் இறப்பதற்குள் கட்டாயம் 'உடையார்' படியுங்கள் ***

உடையார் படித்து விட்டு தஞ்சை போங்கள், அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று,

கண்ணில் ஜலம் வழிய கத்துவீர்கள், வாழ்க இராசராசன் என்று வாழ்த்துவிர்கள்.

இப்படி ஒரு படைப்பை தந்த எழுத்தாளர் 'எழுத்து சித்தர் திரு பாலகுமாரன்' அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்...

# தமிழ்நேயன் ஏழுமலை #

சேர்த்தவர் : தமிழ்நேயன்
நாள் : 27-Jan-16, 1:59 pm

உடையார் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே