குடி

‘அரசு அல்ல ..
ஆள்குடி!
அது வாழ்க வாழ்க’
என்றார்.

பிறகு அவரே,

‘ஆள்குடி
வாழ்குடி
லால்குடி
குடிமக்கள்
குடிசெய்வல்…’

என்று அடுக்கிவிட்டு
தடுமாறி எழுந்து நின்றார்.

‘அந்தக் குடி வேறு;
இந்தக் குடி வேறு’
என்று சொல்ல மிகவும் விரும்பினேன்.

அதற்குள், பாவம், இறந்து விட்டார்!


எழுதியவர் : புதுயுகன் (22-Jun-24, 11:06 am)
சேர்த்தது : pudhuyugan
Tanglish : kuti
பார்வை : 101

மேலே