ஆசை

படிப்பவனுக்கு படிப்பை
விரைவில் படிப்பை
முடிக்க ஆசை

படிப்பை முடித்தவனுக்கு
நல்ல வேலை
கிடைக்க ஆசை

வேலையில் இருப்பவனுக்கு
வியாபாரம்
செய்ய ஆசை

வியாபாரம் செய்பவனுக்கு
நிறைய பணம்
சேர்க்க ஆசை

நிறைய பணம்
சேர்த்தவனுக்கு
நிம்மதியாய் உறங்க ஆசை

நிம்மதியாய் உறங்கும்
பிச்சைக்காரனுக்கு
படித்திருக்கலாமோ என்று ஆசை.

எழுதியவர் : J (19-Oct-18, 5:17 pm)
Tanglish : aasai
பார்வை : 73

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே