எச்சரிக்கை மனிதா

முகில் சிந்திவிட்ட பலத்துளியில்
ஒருத்துளியுமா எனக்கில்லை...💔
அணைந்துவிடும் நிலையில்லா உலகில்
என்று முடியுமோ இத்தொல்லை...😫
எனையும் எண்ணி மடிசுறப்பால் இயலன்னை...😶
அதிலும் கைவைப்பது மனித மனத்தின்ணை....😑
பசுமை காப்பதில் இல்லை இவனின் மனம்...😥
கண்டதை அபகரிப்பது மட்டுமே அவனின் குணம்...😔

புசிக்கும் வாயிற்க்கு நீ பொறுப்பு,
பசிக்கும் என் வயிற்றிற்கு யார் பொறுப்பு...😞
வகிக்கும் இடத்திற்கு நீ பொறுப்பு,
தாகம் கிரகிக்கும் என் நாவிற்கு யார் பொறுப்பு...😞
நிலமடைத்து பெருக்குவதற்கு நீ பொறுப்பு,
என் இனம் அழிந்து போவதற்கு யார் பொறுப்பு...😖
உலகனைத்தும் சிதைக்கிறாயே அதற்கு நீ பொறுப்பு, இயற்கை சினம் தெளித்து எழுவாளே அதற்கு யார்தான் பொறுப்பு...😖

இது பூகோளம் முழு உயிர்க்கோளம்
ஒருஇனம் வாழும் மறுஇனம் சாகும்
இதில் எதுநியாயம்...?
இயற்கையும் மாயம்,

மனிதா யோசி...
இயற்கை நேசி...
உயிர்களுடன் பேசி...
பெறுவாய் ஆசி...
மீண்டும் யோசி...😊

இப்படிக்கு

இயற்கைத்தாயின் மூப்பிள்ளை
🐶🐱🐻🐼🐮🦁🐯🐒🐗🐴🐛🐜🐍🐑🐓🌴🌳🌲🌱☘

எழுதியவர் : ஹாருன் பாஷா (18-Oct-18, 11:29 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 43

மேலே