கூடவே இருக்கலாம்

அகத்தில் உள்ளதை
அம்பலப்படுத்தி
கெட்டவனென்று என்னைக்
காட்டிக் கொடுக்காமல்,
முகத்தில் பூசிய
பூச்சுகளால்
என்னை அழகாகக் காட்டி
என் அகம் தொட்ட உன்னை
இதயத்தில் சுமப்பேன்
உயிர் உள்ளவரை,
பாடி பரிசு பெறும்
புலவர் போல—நீயும்
அரண்மனை வாசத்துக்கு
அடிபோடுகிறாயோ!
கவலை வேண்டாம்
கைவிட மாட்டேன்
கண்ணாடியே
கூடவே இருக்கலாம்

எழுதியவர் : கோ. கணபதி. (21-Oct-18, 8:54 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : koodave irukkalaam
பார்வை : 45

மேலே