மானிடம்

இராமன்,பரதன்,இலக்குவன்,சத்ருகனன்
தாய் வயிற்றில் உதித்தவர்களே
இராம அவதாரம் விஷ்ணுவின்
ஏழாவது அவதாரம்
அதிதி-காஸ்யபருக்கு பிறந்தவனே
வாமனன், விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம்

தேவகி-வசுதேவர் பெற்றேடுத்த
பிள்ளை கண்ணபெருமான்
பரம்பொருளாம் விஷ்ணுவின்
எட்டாவது அவதாரம்

இப்படி மனிதனாய் மனித
தாயின் கருவில் சுமக்கப்பட்டு
தெய்வமே மண்ணில் பிறக்க

மனிதர் நாம் மண்ணில்
தாயின் வயிற்றில் பிறக்கிறோம்
எத்தனை புனிதமானவள் தாய்
எத்தனை புனிதம் நம் மானிடப் பிறவி
யோசித்து பாருங்கள் ..............
கோவிலின் கர்ப கிரகத்தில் ,

கருவறையில் வீற்றிருப்பவர் கடவுள்
தாயின் கர்பத்திலிருந்து
பிறப்பு நமது....................

இதனால்தானோ நம் நாட்டில்
குழந்தை ஐந்து வயதுவரை
கடவுளாய் போற்றப்படுகிறான் (ள்)

கடவுள் தன்னை நினைத்துதான்
தன்னைப்போல் மனிதனை உருவாக்கினானோ......

மனிதப் பிறவி உயர்வானது
மனிதன் தன்னுள் கடவுளை
உணர்கையில் .......கடவுளாய்
உயர்த்தப்படுகிறான்........................
குழந்தை அது அறியாமலே
கடவுளாய் இருக்கிறது...............
மனிதன் என்று தன்னை
உணராத வரை !

நம்மை நாம் உயர்திக்கொள்வோம்
நம்முள் கடவுளைக் கண்டு
மானிடம் புனிதமானது!
தாய் என்றும் புனிதமானவள்
அவள் தெய்வம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Oct-18, 1:42 pm)
பார்வை : 131

மேலே