அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி - முத்தொள்ளாயிரம் 39
நேரிசை வெண்பா
அறைபறை யானை அலங்குதார்க் கிள்ளி
முறைசெயும் என்பரால் தோழி – இறையிறந்த
அங்கோல் அணிவளையே சொல்லாதோ மற்றவன்
செங்கோன்மை செந்நின்ற வாறு! 39
- முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
கழுத்தில் மாலை அணிந்து கொண்டு, கிள்ளி பறை முழக்கத்துடன் யானைமேல் வருகிறான். அவனைப் பார்த்ததும் என் தோளிலிருந்த வளையல்கள் நழுவிக் கீழே இறங்குகின்றன. தோழி! கிள்ளி நீதி தவறாமல் முறை செய்பவன் என்கின்றார். என் தோளிலிருந்து நழுவும் வளையல் அவன் எத்த அளவில் செங்கோல் செலுத்துகிறான் என்பதைச் சொல்கிறதே!

