இடைவெளி
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னிரு
கண்களின்
இடைவெளியில்
நானும் என் காதலும்
இடைத்தரகரில்லா இல்லமானோம் ...
காதல் காமம்
இடைவெளி கண்டோர்
இப்பூமியின்
பழமை உணர்ந்த
புதுமை வாசிகள் ......
இரு கண்கள் சேர்ந்து
ஒரு காட்சி காணும்
என்ன இடைவெளியோ?
ஒருவரை ஒருவர்
பார்த்ததே இல்லை ...
ஒரு புள்ளி
மறு புள்ளி
இடைவெளியில்
பல கோணங்களில்
பல கோலங்கள்
ஒளிந்துள்ளதோ ?
சாதாரண மரக்கட்டையின்
சராசரி இடைவெளியில்
பல சப்தங்கள் சங்கமித்துள்ளதோ ?
ஆழ்ந்து
அறிந்து
துளையிட்டால்
புல்லாங்குழலாகி
பல கீதங்கள்
புதிய சங்கீதங்களாகுமோ ?
வானுக்கும்
மண்ணுக்குமான
இடைவெளி தான்
கற்பனைக்கும்
கவிதைக்குமான இடைவெளியோ ?
இம்சைக்கும்
அகிம்சைக்குமான
இடைவெளிதான்
சகிப்புத்தன்மையோ ?
நாட்களுக்கும்
நாட்காட்டிக்குமான
இடைவெளிதான்
நாட்டு நடப்போ??