சிக்கு புக்கு சிக்கு புக்கு

நீங்க ரெண்டும் பேரும் இன்னும் எத்தனை நாளுக்கு தான் பிரிஞ்சே இருக்க போறீங்க?

உங்க ரெண்டுபேருக்கும் உள்ள அப்படி என்ன தான் சண்டை??

எங்களை பாக்குறவங்க அதிகமா கேக்குற கேள்விகள் இதுதான்.

என்னமோ எங்க வாழ்கை மேல அவங்களுக்கு என்ன தான் அவ்வளோ அக்கறையோ.

ஒரு பழைய கெழவி அடிக்கடி சொல்லும் "வீட்டுக்குள்ள விட்டத்தை பார்த்து பேச வக்கில்லாதவன் வீதியில போறவங்கள பத்தியெல்லாம் பேசுவானு" அது தான் எனக்கு ஞாபகம் வருது.

நாங்க ரொம்ப பிரிஞ்சும் போய்டல ரொம்ப நெருங்கியும் வந்துடல.

எங்க எல்லை எவ்ளோன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.

நாங்க இப்படி இருந்த மட்டும் தான் ஒன்னாவே இருப்போம்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்

அதுனால எங்களை பத்தி எதுவும் பேசாதிங்கனு சொன்னுச்சாம் எங்க ஊரு "தண்டவாளம்"

எழுதியவர் : ஜெய் (2-Feb-19, 12:51 pm)
பார்வை : 161

மேலே