உடை

உறையும் குளிரில்
உடுத்தும் உடையில்
உடலை காத்தான்
வெள்ளையன்..!
அனல் வெயிலில்
அக்கினித் தனலில்
அப்படியிருக்க
அவசியம் என்ன??
கழுத்து வரை பொத்தன்
கை வரை சட்டை
அவசியம் இருந்தது
அவனுக்கு....
கதிரவன்
கதிர்கள்
காட்டாறாய் தாக்கும்
தேசத்தில் இது தேவையா??
உடுத்தும்
உடைதான்
ஒழுக்கம் என்றால்
காந்தி எங்கே??
ஆபாசம் இன்றி
அணியும் ஆடைகள்
அனைத்தும்
ஒழுக்கமே..
இதை
உரக்க சொன்னால்
ஒழுக்கமின்மை!!!!!!