எதற்காக
மனிதங்களே மரணித்து விட
மனிதர்களெனும் பெயருடன்
நடமாடிக் கொண்டிருப்பவர்கள் ,
இரட்சிப்பே இல்லாது போன
என் தேசத்தின் தொலைந்து போன
நிம்மதியைத் தேடத் தெரியாதவர்கள் ,
எமக்குள் தோன்றி யிருக்கும்
பிரச்சனைகளுக்குள் தொலைந்து போன
காரணங்களை தேடத் தெரியாதவர்கள் ,
இருக்கின்ற மனிதர்களை யெல்லாம்
இயந்திரமாய் மாற்றி விட்டு
இலாபம் சம்பாதிப் பவர்கள் ,
இவ்வுலகில் வாழும் மனிதர்களின்
பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை
வழங்க முடியாதவர்கள் ,
பரந்துபட்ட இந்த உலகிலே
மறைந்து கிடக்கும் மர்மங்களை
கண்டு பிடிக்க முடியாதவர்கள் ,
அண்ட வெளியில் மறைந்து
கிடக்கும் மனிதனைப் பற்றி
ஆய்வு செய்கின்றார் களாம்,
எதற்காக ?
அவனையும் அழைத்து வந்து
பிரிவினைகள் கற்றுத் தரவா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
