லக்ஷ்மி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லக்ஷ்மி
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Jul-2015
பார்த்தவர்கள்:  489
புள்ளி:  64

என்னைப் பற்றி...

லக்ஷ்மி என்கிற வள்ளுவன் வாசகி!
என் பக்கங்கள் பார்த்தவர்களுக்கும், பார்க்க போகிறவர்களுக்கும் நன்றி!!

என் படைப்புகள்
லக்ஷ்மி செய்திகள்
லக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2019 11:06 pm

வளங்கள் எல்லாம் வாரி இரைத்து வாழ வழி செய்தான் இறைவன்...
நிலங்கள் எல்லாம் செழித்திட
நீர் நிலைகளை படைத்தான்...

விதைகள் எல்லாம் சேகரித்து
விதைத்திட புல்லினங்கால் ...
மணம் வீசும் மலர்களும்
மகரந்தம் சேகரிக்க தேனீக்களும்

வானுயர்ந்த மலைகளும்
வளைந்தோடும் ஆறுகளும்
பனித்துளிகள் இளைப்பாற
பச்சை வயல்களும் படைத்தான்...

வானவில்லை வானுக்கும்
வண்ணத்தில் மின்னும்
பூவினங்களை காய் கனிகளை
பூமிக்கும் நன்கொடையாக்கினார்...

இன்னும் எத்தனை எத்தனையோ
இயற்கை செல்வங்கள் யாவும்
இயல்பாய் இயங்கிடும்படி
இதமாய் காலநிலை அமைத்தான்...

அத்தனையும் அனுபவிக்க
அவனியில் மனிதனை படைத்தான்
ஆர்வக்கோளாறும் அளவற்ற ஆசைகளும் மனிதம் த

மேலும்

லக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2019 10:49 pm

அதிகம் எழுதப்படாத கவிதை அப்பா...
அதிகம் வாசிக்கப்படும் கவிதை அப்பா...

தன்னலம் கருதாத தாய்மையும்
தலைவணங்கும் உன்னதம் அப்பா...

சுயநலம் தவிர்த்து சுமை சுகமென
சுமக்கும் சுகந்தம் அப்பா...

உலகின் விடியல் ஆதவனில்...
உயிரின் விடியல் அப்பாவில்...

அன்னை கருவில் பத்து மாதம்...
அன்பால் அவரில் அனுதினமும்...

ஆயுள் உள்ளவரை மறக்காதே மனம்...
அவர் கரம் பிடித்து நடை பழகிய தினம்...

மண் சேரும் மழையின் வாசம் சிறிது...
உன் நேசம் சொல்லும் பாசம் பெரிது...

சிறு சினுங்களுக்கும் பெரும் துயர் கொள்வார்...
சிறு புன்னகையில் பெரும் படை வெல்வார்...

தோற்று மகிழ்வார் குழந்தையாய் இருக்கையில்...
தோள் கொடுப்பார் தோழனாய் இளம

மேலும்

என் வாழ்வின் உண்மை வரிகள் 05-Aug-2019 11:23 pm
லக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 12:03 am

வேகமாக தான் சுழல்கின்றன மின்விசிறிகள்... வேண்டுதல் போல் கொட்டுகின்றன வியர்வைத்துளிகள்...

மேலும்

லக்ஷ்மி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2019 12:01 am

அடித்துக்கொண்டது நான் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மெதுவாக பறந்து செல்கிறது மேனிமிதிருந்து கொசு ... !

மேலும்

லக்ஷ்மி - லக்ஷ்மி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2017 6:17 pm

விழிகளால் தேடாதே !
இமைக்கும் போது தவறிடும் !
இதயத்தால் தேடாதே !
துடிக்கும் போது மறந்திடும் !

ஆன்மாவால் தேடு !
ஆயுள் கடந்தும்
உன்னோடு இருக்கும் !
உண்மையாய் இருக்கும் !

மேலும்

உங்கள் வாசிப்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நட்புக்களே...... 04-Nov-2017 1:15 pm
வாழ்க்கை என்றாலும் மரணம் என்றாலும் உன் மடியின் மேல் தவம் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Nov-2017 12:31 pm
அருமை நட்பே.... 03-Nov-2017 7:36 pm
லக்ஷ்மி - இளவெண்மணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2017 8:38 pm

இரவுகளின் தனிமைகளில்
உன் நினைவே போர்வை !
இனிமைகளை துளித்துளியாய்
வழங்கிடும் உன் பார்வை !

மனம்முழுதும் உனதுருவம்
வரைகிறதே கோலம் !
உறவுகளை வளர்ப்பதற்கு
உதவிடுமே காலம் !

கனவுகளில் பனிமலராய்
ஒளிவிடும் உன் தேகம் !
இதழ்களில்தேன் அருந்துவதால்
தீர்ந்திடுமோ தாகம் !

விலகுவதால் நெருங்கிவர
விரும்புகிறாய் போலும் !
வெறுப்பதுபோல் பாவனையால்
நடிப்பதெல்லாம் போதும் !

@இளவெண்மணியன்

மேலும்

நன்றிகள் பல ! 09-Sep-2017 5:26 pm
காதல் புதுமை பாராட்டுக்கள் 09-Sep-2017 5:22 pm
நன்றி ! 08-Sep-2017 7:53 pm
அழகு ! 08-Sep-2017 7:23 pm
லக்ஷ்மி - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2017 4:54 pm

நீ முத்தமிட
எத்தனிக்கும்போதே
நான் வெட்கத்தை
பிரசவித்து விடுகிறேன்..!

மேலும்

அன்பும், நன்றியும் சகோ.. 26-Jul-2017 5:31 pm
அருமை! 26-Jul-2017 4:59 pm
அன்பும், நன்றியும் தோழா.. 25-Jul-2017 3:24 pm
சுகம்.. 24-Jul-2017 9:55 pm
லக்ஷ்மி - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 4:58 pm

இதயம் தொலைத்தவன்
நான் என்பதால்
நீ நிம்மதியாய் இருக்கிறாய்!

இதயத்தை தொலைத்தது
உன்னிடம் என்பதால்
நான் நிம்மதியாய் இருக்கிறேன்!

மேலும்

தொலைந்த இதயத்தின் தொலையாத முகவரி அவள் இதயம் இப்படிக்கு காதல் 18-Oct-2015 7:02 am
லக்ஷ்மி - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2016 7:09 pm

யார் நீ?
உனக்கும் எனக்கும் என்ன உறவு?

என்னை நீ நேசிக்கிறாயா?- என்னை
உன்னிடம் பேசவிடாமல் தடுப்பது எது?

தேவையற்ற சிந்தனைகள்!
பதிலற்ற கேள்விகள்!

மனம் விட்டில் பூச்சியாய்
உன் நினைவுகளில் சிறகடிக்க

வேதனையும் வெறுமையும் மட்டுமே
எஞ்சியுள்ளது என் மனதில்!

மேலும்

Really Very Nice SIR. 14-May-2016 6:13 pm
காதலின் தவிப்புகள் கவிவரிகளில் அருமை. 13-May-2016 6:40 pm
கருத்திற்கு நன்றி. 13-May-2016 8:40 am
கருத்திற்கு நன்றி. 13-May-2016 8:39 am
லக்ஷ்மி - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2015 10:55 pm

உன் கனவுகளை தாங்கி வருவதால்
என் இரவுகளை நேசிக்கிறேன்!

உன் நினைவுகளை தாங்கி இருப்பதால்
என் இதயத்தை நேசிக்கிறேன்!

மேலும்

அருமை நட்பே 26-Nov-2015 9:37 pm
நன்றி நண்பர்களே ! 26-Nov-2015 1:27 pm
காதல் ததும்பும் வரிகள் 26-Nov-2015 11:04 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Nov-2015 12:48 am
லக்ஷ்மி - மு குணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2015 12:54 pm

உண்ண
உணவு இன்றி
ஒரு வேலை
கை ஏந்தி.......

உடுத்த
உடை இன்றி
கந்தல் துணி
நான் ஆகி........

இருக்க
இடம் இன்றி
விலகி நிற்க்கும்
விலங்காகி.......

வாழும்
என்னைக் கண்டு
பைத்தியம் எனக் கூறும்
எந்த பைத்தியம் அறியும் !.......

என்னை
நான் முழுமையாக
இழந்து உன்னோடு
வாழ்கிறேன் என்று !!......

-தஞ்சை குணா

மேலும்

நன்றி நட்பே !..... 17-Nov-2015 1:51 pm
சிறப்பு தோழரே 16-Nov-2015 6:30 pm
தங்களின் புரிதலுக்கு நன்றி ....... 16-Nov-2015 12:17 pm
நன்றி அன்பரே !..... 16-Nov-2015 12:17 pm
லக்ஷ்மி - லக்ஷ்மி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2015 5:08 pm

சூரியனையே சுட்டெரிக்கும்
பார்வை உனது !
சுகந்தமே ஒரு முறையாவது
என்னை பார்த்துவிடு !

நீ சொல்லாத வார்த்தைகள் கூட
என் காதுகளுக்கு சுகமே !
இதயமே இருந்தாலும் ஒரு வார்த்தையாவது
என்னிடம் சொல்லிவிடு !

உன் சுவாசக்காற்றாய் சுவாசிப்பதற்காகவே
நான் உயிர் வாழ்கிறேன் !
என்னுயிரே உனக்கு தெரியுமா தென்றலைவிட
வாசமானது உன் சுவாசம் என்று !

திருக்குறளாய் வீற்றிருக்கும் உன்
இதழ்களின் அர்த்தங்கள் எனக்கானவை !
திருமகளே திருவள்ளுவர் என எந்தன் பெயர்
மாற்றி அமைத்துவிட்டேன் !

கைதாக்கினாய் எனது கைகளை
உனக்கான கவிதைகளுக்காக !
இனியவளே இலக்கணப்பிழை தவிர்த்து
இதயத்தை இடம் மாற்று !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (35)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (35)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (35)

user photo

சுரேந்தர் குமார்

கோயம்புத்தூர்
ஜெபா

ஜெபா

தமிழ்நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே