ஜெபா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜெபா |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 31-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 10 |
பொய்யாக பழகி உண்மையாக
என்னை ஏமாற்றி விட்டாய்!
உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
பொய்யிலே கருத்தரிக்கின்றது..
இதை அறியாமல் என்
காதலை
கருத்தரிக்கவிட்டேன்
இப்போ
என்னை கதிர் அறுத்து சென்று
விட்டாயடி துடிக்கிறேன்!!
காதலுக்கு
தெரியவில்லை எல்லை ...
அதிகம் நேசித்துவிட்டேன் ....
விஷத்தை பருகிய ...
அவஸ்தை படுகிறேன் ....!!!
நீ
என்னை விலக்கும்
போதெலாம் -தனிமையின்
கொடுமையை உணர்கிறேன் ....!!
சந்தித்தேன் அன்று முதல்
சிந்தித்தேன் உன்னை
கண்டித்தேன் மனதை
நிந்தித்தேன் மெதுவாய்
தந்தேன் முழுதாய் காதல்
கவித்தேன் என்று கண்டேன்.
இழைத்தேன் நுலாய்
அலைந்தேன் உனக்காய்
வளைத்தேன் வானை
துளைத்தேன் ௬ர்வாளாய்
இழந்தேன் என்னை
படித்தேன் உன் நாமாய்
கரைந்தேன் நீரில் குமிழியாய்
உடைந்தேன் ஒ௫ கணத்தில்
வரைந்தேன் வர்ணத்தில்
திளைத்தேன் உன் சிரிப்பில்
சிறந்தேன் காதலிலே
சரிந்தேன் உன் நினைவுகளில்
என்
தோழி நீ
உன்
தோழன் நான்
இன்று நீ
என் காதலி
நான் உன்
காதலன் ...
நாளை நீ
மனைவி ஆகலாம்
ஆகாமல் போகலாம்
ஒன்று மட்டும் உறுதி
நீ மறுபடியும்
நீ என் தோழி ஆகா முடியாது
நான் உன் தோழனாக இருக்க முடியாது
என்பதை மட்டும் நினைவில் வைத்து
என்னை நீ காதலி ...
1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்
கற்று முடித்துவிட்டேன் என்று நம்பிதான்
பணிக்கு வந்தேன் ஆயினும்
ஏன் கற்று கொடுத்தாய்,
காதலின் வலி இதுதான் என்று!!!
என்னை திருடி
என் மனதை திருடி
என் சிரிப்பை திருடி
என் காதலை திருடி
என் நிம்மதியை திருடி
என் உறக்கத்தை திருடி
உயிர் பிரிய காத்திருக்கும் உடலாய்
என்னை மட்டும்
ஏன் விட்டு சென்றாய்
நீ நடந்த காதல் பாதைக்கு
வழித்தடம் வேண்டும் என்பதற்காகவா!!!
முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...
அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்
என்னை வேண்டாம் என்றவனை...
முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...
அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்
என்னை வேண்டாம் என்றவனை...
இன்று காதலை சொல்லியே ஆகவேண்டும்...
ஒரு முறைக்கு நூறு முறை கண்ணாடி முன் பேசி பழகி...
இருக்கும் சட்டைகளின் மிக நல்ல சட்டையை தேடிப்பிடித்து...
எழுந்ததில் இருந்து ஆயிரம் முறையாவது கடிகாரத்தை பார்த்து பார்த்து...
சரியான நேரத்தில் பேருந்து நிலையத்திற்க்கு சென்று காத்திருக்க...
அவளும் வந்தால் - ஆனால் அவள் என் பக்கம் வருவது போலவே ஒரு உணர்வு...
அவள் பக்கம் நெருங்க நெருங்க வியர்வையில் உடை நனைய, கற்பனை குதிரை எல்லை மீறி பறக்க...
நிஜமாகவே அவள் என் முன் வந்து நின்றேவிட்டால்...
திகைப்புடன் நான் அவளை ஏறெடுக்க...
அவள் தயக்கத்துடன் வாய் திறந்து கேட்டாள்
அண்ணா, 12பி பஸ் போயிடுச்சா...