காதலை சொல்ல
இன்று காதலை சொல்லியே ஆகவேண்டும்...
ஒரு முறைக்கு நூறு முறை கண்ணாடி முன் பேசி பழகி...
இருக்கும் சட்டைகளின் மிக நல்ல சட்டையை தேடிப்பிடித்து...
எழுந்ததில் இருந்து ஆயிரம் முறையாவது கடிகாரத்தை பார்த்து பார்த்து...
சரியான நேரத்தில் பேருந்து நிலையத்திற்க்கு சென்று காத்திருக்க...
அவளும் வந்தால் - ஆனால் அவள் என் பக்கம் வருவது போலவே ஒரு உணர்வு...
அவள் பக்கம் நெருங்க நெருங்க வியர்வையில் உடை நனைய, கற்பனை குதிரை எல்லை மீறி பறக்க...
நிஜமாகவே அவள் என் முன் வந்து நின்றேவிட்டால்...
திகைப்புடன் நான் அவளை ஏறெடுக்க...
அவள் தயக்கத்துடன் வாய் திறந்து கேட்டாள்
அண்ணா, 12பி பஸ் போயிடுச்சா...