வியானி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : வியானி |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 28-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 260 |
புள்ளி | : 66 |
...
எதுவுமே நிரந்தரமில்லை...
எதுவுமே நிரந்தரமில்லை...
Unnai kaanum en kangalukku kooda theriyavillai,
unnai kanpathu kanava illai nenaiva endru:
yean endral endrum ne,
en kanmun erupathal!
----------------------------------
மின்கட்டணம் உயரும்....
பேருந்து கட்டணம் உயரும்...
பால்விலை உயரும்....
அங்காடியில்...
மண்ணெண்ணை,
சர்க்கரை,
பாமாயில் விலை உயரும்,
பல்பொருள் விலையும் உயரும்.....
எங்கள் கணக்கில்....
வங்கியில் பணமும்,
வாழ்க்கை தரமும்,
உயருமா....?
உயராது....
எப்படி உயரும்...?
போதாது,
போதாதென்று....
வாங்கும் குடிமகனாய்,
டாஸ்மார்க்கில்,
பாட்டிலின் விலையுமல்லவா
உயருகிறது....
நல்லனவற்றை....
யார் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ளமாட்டோம்,
சோத்துக்கு உதவாத கொள்கைகளை
வைத்துக்கொண்டு...
கோடிகோடிாய்
கொள்ளையடித்தாலும்,
எங்கள் கட்சிதான்....
எங்கள் தலைவர்கள்தான்....
மாற்று கிடையாது....
வெட்டியாய் பேசுவ
முகம் தெரியாதவனை நம்பியது
முதல் குற்றம்...
நம்பியவனிடம் உயிர் கொடுத்தது
மறு குற்றம்...
கொடுத்த உயிரை வாங்க மறுப்பது
அடுத்த குற்றம்...
விலகி செல்பவனை தடுக்க நினைப்பது
மிகப்பெரிய குற்றம்...
அனைத்து குற்றமும் என் மேல இருக்க,
ஏன் குறை சொல்கிறேன்
என்னை வேண்டாம் என்றவனை...
மாரிப் பொழுதில்
இனம் புரியாத குளிரில்
புடவை முந்தி போர்வை என மாற
அருகில் நீ இருந்து அரவணைத்து
அழைத்து செல்வது போல்
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...
காவேரி கரையில்
கதிரவன் மறைந்த பொழுதில்
உன் மனமும் என் மனமும் காற்றுக்கு துணையாய் பறக்க
நீயும் நானும் மெய் மறந்து சிலிர்க்க
ஆனந்த அக்கலிப்பில் மகிழ்வது போல்
கனா கண்டேன்
அது கனாவாக போகாமல் காத்திடுவாய்
என் அன்பே...
நிலா முற்றத்தில் கயிற்று கட்டிலில் நான் அமர
என் மடி மீது தலை சாய்த்து நீ உறங்க
நிலவோ என் மீது பொறாமை கொண்டு
மேக தூணின் பின் மறைந்து நின்று
என்னை நோட்டமிடுவது போல
கனா கண்டேன்
அது
ஏனடா என்னை இப்படி காதலிக்கின்றாய்...
முகம் காட்ட மறுக்கும் என்னை முழுதாக காதலிக்கின்றாய்...
முகவரி கூற மறுக்கும் என்னை முழு மனதோடு காதலிக்கின்றாய்...
உன் ஏக்கங்களை மதிக்கா என்னை மலர மலர காதலிக்கின்றாய்...
உன் பாசத்தை உணரா என்னை பரந்த மனதோடு காதலிக்கின்றாய்...
உன்னை நம்ப மறுக்கும் என்னை நம்பிக்கையோடு காதலிக்கின்றாய்...
உன்னை எள்ளி நகையாடும் என்னை எல்லையின்றி காதலிக்கின்றாய்...
நிச்சயம் என்னால் முடியாது - உன்னை காதலிக்காமல் இருக்க
ஒரு பின்னிரவில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்தான் அவன்...
ஏ பித்தனே...
நான் தூங்கப் போகிறேன்
என்னை தொந்தரவு செய்யாதே என்றேன்..
நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்
இது கனவு என்றான் அவன்...
தூங்கிக் கொண்டிருக்கும் போதே
மீண்டும் தூங்க செல்வது
கனவில் மட்டும்தான் சாத்தியம்
கனவில் மட்டும்தான் நீ
உண்மையாக இருக்கிறாய்...
அடுத்தவர் காணும் கனவை உன்னால் திருட முடியாது
அவர் உழைப்பை நீ திருடுவது போல...
முட்டாளே...
கனவு என்பது வெறும் மாயை என்றேன்...
அப்படிஎன்றால் ''கனவு மெய்ப்பட வேண்டுமென்று''
ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?
நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்
"சுதந்திரம் பறிபோனது"
வகுப்பரை ஜன்னல் கம்பியினை
பிடித்துக் கொண்டு
வேடிக்கை பார்த்த
குழந்தையின் சிந்தனை!!!
நெஞ்சில் எட்டி உதைத்த அவனை
கொஞ்சி முத்தமிட்டேன்
குழந்தை...
வாழும் காலத்தில் நரகத்தை சந்திக்க ஆசையா
காதல் செய்...
உயிரோடிருக்கும் பொழுது மரணத்தை சுவைத்து பார்க்க ஆசையா
காதல் செய்...
வாழும் பொழுதெ நடை பிணமாய் வாழ ஆசையா
காதல் செய்...
நம்பிக்கை துரோகத்திற்க்கு செயல் விளக்கம் வேண்டுமா
காதல் செய்...
உன் சிரிப்பிற்க்கு சிறை பூட்ட வேண்டுமா
காதல் செய்...
காதல் செய்...
அவளின் வெட்கத்தை வருணிக்க
வானவில்லிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
வெட்கத்தோடு தன் ஏழு வண்ண புன்னகையோடு
சரி என்றது
அவளின் முத்து போன்ற பற்கள் கொண்டுவரும் சிரிப்பை வருணிக்க
நவரத்தினதிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
ஜொலிக்கின்ற ஓளி கற்களை வீசி
அது என் பாக்கியம் என்றது
அவளின் பாதாம் கண்களை(almond eyes) வருணிக்க
கிரகங்களிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
அது திகைத்து
ஒரு நொடி சுற்றாமல் மௌனமாய் நின்று
இது கணவோ என்று தன்னை கிள்ளிக்கொண்டு
சம்பதம் என்றது
அவளின் கூந்தல் அழகை வருணிக்க
ஆலமர வேர