என் காதலனுக்காக

ஏனடா என்னை இப்படி காதலிக்கின்றாய்...

முகம் காட்ட மறுக்கும் என்னை முழுதாக காதலிக்கின்றாய்...
முகவரி கூற மறுக்கும் என்னை முழு மனதோடு காதலிக்கின்றாய்...
உன் ஏக்கங்களை மதிக்கா என்னை மலர மலர காதலிக்கின்றாய்...
உன் பாசத்தை உணரா என்னை பரந்த மனதோடு காதலிக்கின்றாய்...
உன்னை நம்ப மறுக்கும் என்னை நம்பிக்கையோடு காதலிக்கின்றாய்...
உன்னை எள்ளி நகையாடும் என்னை எல்லையின்றி காதலிக்கின்றாய்...

நிச்சயம் என்னால் முடியாது - உன்னை காதலிக்காமல் இருக்க

எழுதியவர் : viyani (17-Jul-15, 9:39 am)
சேர்த்தது : வியானி
Tanglish : en kadhalanukkaaka
பார்வை : 103

மேலே