காதல் பிணைப்பில்

காதல் பிணைப்பில்
----------------------------



வேலை நிமித்தம் வெளிநாடு சென்று

ஐந்து வருட இடைவெளிக்குப் பின்

வீடு திரும்புகின்றான் அன்னவன்

வழிமேல் விழிவைத்து காத்திருந்த

காரிகையும் மன்னன் வரவில்

பெருமகிழ்ச்சி கொண்டாள்

சிரம பரிகாரம் ஆனபின்னே

காமத்தீ வாட்ட இருவரும்

மஞ்சத்தை தஞ்சம் அடைந்தனரே

ஐந்து வருட முத்தங்கள் அடக்கி

அமிழ்ந்த உதரங்கள் அவ்விரவில்

அவன் அணைப்பில் மொட்டவிழ்ந்த

குமுதம் ஒக்க அலர்ந்து மலர்ந்து

அவன் இதழ்களை அலங்கரிக்க

அக்கணமே காமன் எய்த

அம்பினால் கட்டுண்டு

மெய்மறந்து இன்புற்றிருக்க


அக்கணம் மேல் மாடத்தில்

சாளரங்கள் திறந்திருக்க

வான வீதியில் உலாவிவந்த

அம்புலி திறந்த சாளறதூடே

ஆங்கு அம்மன்ஜத்தில்-தன்

தன்ஒளியால் சாமரம் வீச

காலத்தால் பிரிந்த அவ்விருவர்

சேர்ந்து இன்பத்தின் எல்லையை

எட்டிநின்றனரே ஆங்கு .






















a

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (17-Jul-15, 10:23 am)
Tanglish : kaadhal pinaippil
பார்வை : 63

மேலே