உளியும் சுத்தியலும்

மின்கட்டணம் உயரும்....
பேருந்து கட்டணம் உயரும்...
பால்விலை உயரும்....
அங்காடியில்...
மண்ணெண்ணை,
சர்க்கரை,
பாமாயில் விலை உயரும்,
பல்பொருள் விலையும் உயரும்.....

எங்கள் கணக்கில்....
வங்கியில் பணமும்,
வாழ்க்கை தரமும்,
உயருமா....?
உயராது....
எப்படி உயரும்...?
போதாது,
போதாதென்று....
வாங்கும் குடிமகனாய்,
டாஸ்மார்க்கில்,
பாட்டிலின் விலையுமல்லவா
உயருகிறது....

நல்லனவற்றை....
யார் சொன்னாலும்
ஏற்றுக்கொள்ளமாட்டோம்,
சோத்துக்கு உதவாத கொள்கைகளை
வைத்துக்கொண்டு...
கோடிகோடிாய்
கொள்ளையடித்தாலும்,
எங்கள் கட்சிதான்....
எங்கள் தலைவர்கள்தான்....
மாற்று கிடையாது....

வெட்டியாய் பேசுவோம்...
வீதிவீதியாய் பேசுவோம்...
விடியவிடிய பேசுவோம்....
மாறப்போவது ஒன்றுமில்லை...
இருக்கவே இருக்கிறது,
எம்பொழப்புக்கு,
உளியும்....
சுத்தியலும்....

எழுதியவர் : பனவை பாலா (20-Jul-15, 7:26 pm)
பார்வை : 554

மேலே