காதலியை வர்ணிக்கும் காதலன்

அவளின் வெட்கத்தை வருணிக்க
வானவில்லிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
வெட்கத்தோடு தன் ஏழு வண்ண புன்னகையோடு
சரி என்றது

அவளின் முத்து போன்ற பற்கள் கொண்டுவரும் சிரிப்பை வருணிக்க
நவரத்தினதிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
ஜொலிக்கின்ற ஓளி கற்களை வீசி
அது என் பாக்கியம் என்றது

அவளின் பாதாம் கண்களை(almond eyes) வருணிக்க
கிரகங்களிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
அது திகைத்து
ஒரு நொடி சுற்றாமல் மௌனமாய் நின்று
இது கணவோ என்று தன்னை கிள்ளிக்கொண்டு
சம்பதம் என்றது

அவளின் கூந்தல் அழகை வருணிக்க
ஆலமர வேரிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
அது வேர்த்து வேரற்று வெட்கத்தோடு
ஆகட்டும் என்றது

அவளை வருணிப்பதும்
வானத்தின் நட்சத்திரத்தை எண்ணுவதும்
கடினம் தான்
வருணித்துக்கொண்டும் எண்ணிக்கொண்டும் போகலாம்
முற்று பெறாது

காதலை வருணிக்கலாம்
ஆனால்
காதலியை வருணிக்க
ஒப்புமை தேடுவது
சற்று கடினமே

என் காதலியை நான் வெறும் வார்த்தையால் வருணித்துவிட முடியும் என்றால்
என்னை விட சிறந்த கவிஞர் இருக்க இயலாது இவ்வுலகில்.

எழுதியவர் : jonesponseelan (16-Jul-15, 4:00 pm)
பார்வை : 11393

மேலே