vadivel somasundaram - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  vadivel somasundaram
இடம்:  Gobichettipalayam
பிறந்த தேதி :  07-May-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Apr-2014
பார்த்தவர்கள்:  389
புள்ளி:  99

என்னைப் பற்றி...

கவிதை கிறுக்கன்.....

என் படைப்புகள்
vadivel somasundaram செய்திகள்
vadivel somasundaram - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2017 2:04 pm

கண்களை மூடி
பார்க்கும் போது
மனதின் இருள்
மனிதமாகிறது

குருடன் பாடும்
கானம் யாவும்
மூங்கில் தேடும்
அபிநய சுதிகள்

குட்டித் தீவில்
வயது முதிர்ந்த
குருவிக் கூடு
கலைச் சிற்பம்

பூக்கள் வனம்
நடுவே சிறு
முள் மெத்தை
இறை சீதனம்

தேசம் கடந்து
பறந்த பறவை
நஞ்சை தின்று
ஜீவன் உமிழும்

பசுமை நிலம்
வறண்டு போக
உழவன் கனா
பாலையாகும்

பூலோகம் பாயும்
நதிகள் முழுதும்
தோன்றி மறைந்த
யுகத்தின் யாசகம்

குறிஞ்சி மலர்
விரியும் நேரம்
ஓர் அதிசயம்
நிகழும் பருவம்

மேலும்

உண்மைதான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Feb-2017 10:46 am
இயற்கையோடு வாழும் வரை மனிதம் என்றும் தோற்பதில்லை. 22-Feb-2017 12:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Feb-2017 10:05 am
என்னுடைய எழுத்துக்களை விட உங்களுடைய ரசனை அழகானது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Feb-2017 10:04 am
vadivel somasundaram - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2016 10:45 am

பூக்களின் கத்திச் சண்டையும்
மனிதனின் ஜாதிச் சண்டையும்
நஞ்சாய் பதியமிடப்படுகிறது

அன்பின் மொழிகள் மனதின் வேதம்
மலரின் விழிகள் மழலையின் பாதம்

சுதந்திர நாட்டில்
இரு சிறகிருந்தும்
பறக்க முடியாது
--கூண்டுக் கிளி--

பேனாவின் சிறையில்
எழுதுபவர்கள் தான்
சூழ்நிலைக் கைதிகள்

ஒரு முறை வாழ்க்கை
நொடிகளும் ரசிப்பானது

பூக்களின் தோட்டத்தில்
காற்றுக்குத்தான் ஆனந்தம்

காலத்தின் காளான்கள்
நஞ்சிலும் மருந்தெடுக்கிறது

வானின் நட்சத்திரங்கள்
மண்ணில் உதிர்கிறது
மனிதனின் வாழ்க்கை
மண்ணுக்குள் முடிகிறது

எழிலின் முகவரியில்
பயணம் தொடங்கியும்
பாலை வன சகதியில்
பாதைகள் முடி

மேலும்

உங்கள் ரசனை மிகவும் அழகியது வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Sep-2016 10:38 am
ஒவ்வொரு வரிகளும் பல அர்த்தங்களை கூறுகின்றன நண்பனே.! உங்கள் கவிநயம் போற்றுதற்குரியன. 19-Sep-2016 11:53 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 19-Sep-2016 10:13 am
இக்கவிதையின் வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது நண்பரே.அருமை அதிலும் கீழ் வரும் வரிகள் என்னை மிகவும் ரசிக்கவைத்தது வாழ்த்துக்கள். கண்கள் அழுகிறது நினைவின் பாரத்தால் மீன்கள் அழுகிறது வற்றிப்போன ஈரத்தால் 18-Sep-2016 4:06 pm
vadivel somasundaram - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2016 10:49 pm

பகிர்ந்துண்ணும் உள்ளம் கொண்ட
பச்சிளம் நெஞ்சங்கள் இவர்களோ
பெற்றவர்களை அறியா செல்வங்கள்
மற்றவர்களும் கவனியா பிள்ளைகள் !
சுழலுகின்ற சக்கரமோ ஒருகையில்
சுழலவுள்ள காலத்தைக் காட்டுகிறது !

நேர்ந்திடும் தவறுகளால் பிறந்தாலும்
தேர்ந்தெடுத்த அரசாங்கம் தவறினாலும்
காத்திடும் உள்ளமுடன் செயல்பட்டால்
மாறிடுமே இவர்களின் வாழ்க்கையும் !

பசியும் பட்டினியுமே வாழ்க்கையெனில்
பாதைதனை மாற்றிடவே வாய்ப்பாகும்
ஆதரவுடன் அணைக்கும் மனமிருந்தால்
அறிவார்ந்த பிள்ளைகளாய் ஆகிவிடும்
வருங்கால விஞஞானியாய் மாறிவிடும்
உதவிடுவோம் வாழ்ந்திட வழிசெய்வோம் !

பழனி குமார்

மேலும்

மன்னிக்கவும் வடிவேல் அவர்களே ....பெயரை தவறுதலாக தட்டச்சு செய்ததற்கு . 12-Sep-2016 3:00 pm
மிக்க நன்றி வேலாயுதம் 10-Sep-2016 4:16 pm
உண்மை உண்மை நண்பரே ....மிக்க நன்றி நடராஜ் 10-Sep-2016 4:16 pm
உண்மை தான் நண்பரே!!! நன்று 10-Sep-2016 10:09 am
vadivel somasundaram - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2016 12:35 pm

இரண்டு நீல வட்டங்கள் வரைந்து
உள்ளே கருப்பும் பச்சையுமாய்
முட்டைகளிட்டு ஆரஞ்சில் ஊறிய
வரைபட எறும்பிற்கு
இறக்கைகள் கட்டிப்
பறக்கக் கற்றுக் கொடுக்கிறாள்
என் மீனுக்குட்டி
டோராவின் பயணங்களுக்காய்..

மேலும்

அருமை 26-Aug-2016 2:02 pm
நன்று!!! 24-Aug-2016 12:33 pm
உண்மைதான்..குழந்தைகளின் செயலில் எல்லாமே கலை நயம் மிக்கது 20-Aug-2016 6:47 am
vadivel somasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2016 5:54 pm

பிறக்கும் போது அழுகையுடன் பிறந்தோம்
நம் தாயின் கள்ளமில்லா அரவணைப்போடு!!!

வளரும் போது நம் தந்தையின் பண்புடன்
வளர்ந்தோம் அதட்டலாக அறிவோடு !!!

கள்ளமில்லாத அன்பு , காசற்ற அதட்டலோடு
கிடைத்த பண்பு , மாசற்ற சுவாசத்தோடு கிடைத்த
அந்த தூயமையான காற்று!!!

வெயிலிலும் மழையிலும் வெட்ட வெளியில்
வெளிச்சோட்டமாய் சுற்றித் திறிந்தோம் சுதந்திரமாய்
நுங்கு வண்டியில் ஒரு பயணம்!!!

கள்ளிக் காடும், வயல் வரப்பும் ,செம்மண் புழுதியுமாய்
வலம் வருவோம் ஒரு இடம் விடாமல் ஆனந்தமாய் !!!

கிராமத்திட்கே உரித்தான தமிழ்ப் பள்ளியில் , தமிழோடு
தங்கமான உணர்வுகளையும்

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி தோழமையே!!! மகிழ்ச்சி!!! 30-Jul-2016 12:48 pm
மகிழ்ச்சி நண்பா!!! உண்மை வரிகள் !!! 30-Jul-2016 12:47 pm
இருக்க வேண்டிய நினைவுகள் எல்லாம் கடந்து சென்ற பொழுதுகளை மாறி விட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Jul-2016 9:51 am
உண்மை.... விலைமதிப்பில்லாத நினைவுகள்... 29-Jul-2016 6:22 pm
vadivel somasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2016 2:25 pm

வலி நிறைந்த சுகம் தான் காதல் .,
அந்த சுகமான வலியோடு பயணித்த
போது தெரிய வில்லை எனக்கு ,
நீ என்னை விட்டு செல்வாய் என்று!!!

ஆனால் நீ விலகிய பின்பு தான் உணர்ந்தேன்
எந்தன் மரணத்தின் வலி என்னவென்று !!!

உன் நினைவுகளை என்னுடன் செதுக்கி
வைப்பேன் எந்தன் உயிர் கல்லறை செல்லும் வரை!!!

மேலும்

அருமை!!! கருத்திட்க்கு நன்றி நண்பரே!!! 29-Jul-2016 5:59 pm
வலிதான் வலிமை ஆகும் எழுதுங்கள் இன்னும் 23-Jul-2016 8:35 am
நன்றி நண்பா!!! 19-Jul-2016 12:53 pm
சுகத்தை மிஞ்சிய வலியும், வலியை மிஞ்சிய சுகமும் நிறைந்ததிந்த காதல். வாழ்த்துக்கள் ... 16-Jul-2016 1:33 pm
vadivel somasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2016 6:30 am

வாழைத்தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம்_நான்...

எல்லா மரங்களும்
எதாவது...

ஒரு கனி கொடுக்க
எதுக்கும் உதவாத...

முள்மரம் நான்...

தாயும் நல்லவள்...

தகப்பனும் நல்லவன்...

தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...

படித்தாலும் ஏறவில்லை...

இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பை பார்க்க...

இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன்...

பிஞ்சிலே பழுத்ததென்று...

பெற்றவரிடம் துப்பிப்போக ...

எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான்...

பத்துவயதில் திருட்டு...

பனிரெண்டில் பீடி...

பதிமூன்றில் சாராயம்...

பதினாலில் பலான படம்...

பதினைந்தில்

மேலும்

நானும் வாசித்தேன் 08-Jul-2016 12:02 pm
vadivel somasundaram - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2015 5:27 pm

துள்ளிக் கொண்டு சுற்றித் திறியும் காலத்தில்
வறுமையில் சென்றது பல காலம்..!

அன்னை மடியில் உறங்க ஆசைப் பட்ட
காலத்தில் அன்னை உறங்கி விட்டால் அக்காலம் ..!

தந்தை அரவணைப்பில் அன்பிற்காக
ஏங்கிய காலம் ஒரு காலம்..!

பருவ வயதில் காதலியைத் தேடிச்
சென்று பணத்திற்காக காதலி விட்டுச்
சென்றது என் பருவ காலம்..!


இவை அனைத்தும் தாண்டி கிடைத்தது
ஒரு நட்பு ., என்னவென்று சொல்ல அதுவும்
குடுத்துவைக்கவில்லை இந்த பரதேசிக்கு..!

இன்னும் காத்திருக்கிறேன் எனக்காக ஒரு உறவு
இவை அனைத்தையும் சமர்பிக்க வரும் என்று..!

அன்பிற்காக ஏங்கும் ஒரு தோழனின் ம

மேலும்

நன்றி நண்பா!!! 08-Dec-2015 8:25 am
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே!! 08-Dec-2015 8:24 am
நட்பின் ரகசியம் இந்த காலத்திற்கு அவசியம்... சிறப்பு.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Dec-2015 6:47 pm
உண்மைதான் நண்பரே!! வாழ்க்கையில் ஆயிரம் மாறுதல்கள் வந்தாலும் என்றும் அதே புன்னகையுடன் அதே சண்டையுடன் இருக்கும் ஒரே ஜீவன் நண்பன் எனும் வித்தகனே!! 30-Nov-2015 5:36 pm
vadivel somasundaram - தர்மராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2015 11:58 pm

நிலவும் இருளுமாய்..!
மழையும் குளிருமாய்..!
சூரியனும் வியர்வையுமாய்..!
இணைந்திருந்த காதல்

மெழுகுவர்த்தியாய் கரைந்தது...

-தர்மா

மேலும்

தங்கள் கருத்தால் உச்சாகம் கூடுகிரது நண்பரே 17-Nov-2015 9:36 pm
அருமையான ஆரம்பம். இன்றைய காதலின் அலங்கோலத்தை இப்படியும் சொல்ல முடியுமா என்று யோசிக்கிறேன், வெற்றிப்படிக்கட்டுகள் உமக்குத் தயாராகி வருகிறது. 17-Nov-2015 2:25 pm
மிக்க நன்றி நண்பா..! தங்கள் கருத்தால் மனம் மகிழ்ந்துவிட்டேன். 16-Nov-2015 11:53 pm
சொல்லாடல் மிக அழகு 16-Nov-2015 11:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

அன்னை பிரியன் மணிகண்டன்

அன்னை பிரியன் மணிகண்டன்

வந்தவாசி (தமிழ்நாடு)
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (16)

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே