எழுத்துப் பிழைகள் --முஹம்மத் ஸர்பான்

பூக்களின் கத்திச் சண்டையும்
மனிதனின் ஜாதிச் சண்டையும்
நஞ்சாய் பதியமிடப்படுகிறது

அன்பின் மொழிகள் மனதின் வேதம்
மலரின் விழிகள் மழலையின் பாதம்

சுதந்திர நாட்டில்
இரு சிறகிருந்தும்
பறக்க முடியாது
--கூண்டுக் கிளி--

பேனாவின் சிறையில்
எழுதுபவர்கள் தான்
சூழ்நிலைக் கைதிகள்

ஒரு முறை வாழ்க்கை
நொடிகளும் ரசிப்பானது

பூக்களின் தோட்டத்தில்
காற்றுக்குத்தான் ஆனந்தம்

காலத்தின் காளான்கள்
நஞ்சிலும் மருந்தெடுக்கிறது

வானின் நட்சத்திரங்கள்
மண்ணில் உதிர்கிறது
மனிதனின் வாழ்க்கை
மண்ணுக்குள் முடிகிறது

எழிலின் முகவரியில்
பயணம் தொடங்கியும்
பாலை வன சகதியில்
பாதைகள் முடிகின்றன.

சுவாசங்கள் ஒரு கவிதை
வாழ்க்கை ஒரு சிறு கதை

கண்கள் அழுகிறது
நினைவின் பாரத்தால்
மீன்கள் அழுகிறது
வற்றிப்போன ஈரத்தால்

உள்ளங்களின் விசாரணையில்
ஒவ்வொரு மனிதனும் கைதிகள்

உள்ளம் பூவாக இருப்பதை விட
பூக்களின் ராஜ்ஜியமாக வேண்டும்

வாழ்க்கையின் பக்கங்களில்
ஆயிரம் எழுத்துப் பிழைகள்

மிதக்கும் வரை சுவாசங்கள்
மரணத்தோடு யுத்தம் செய்யும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (5-Sep-16, 10:45 am)
பார்வை : 122

மேலே